Header Ads



வலுக்கட்டாயமாக புர்காவை கழற்றிய பொலிசார்


ஆஸ்திரியாவில் பெண் ஒருவரின் புர்காவை பொலிசார் வலுக்கட்டாயமாக கழற்ற கூறி அதை சோதனை செய்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது.

இது ஆஸ்திரியாவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாகவும், தலைமுடியில் இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைகளான புர்கா மற்றும் நிகாப்பிற்கு என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு இஸ்லாமிய குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் ZellamSee என்ற கிராமத்தில் பெண் ஒருவர் புர்கா அணிந்திருந்தால், பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக கழற்றும்படி கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அந்த புர்காவை கழற்றிய பின்னரும் நன்றாக உதறும் படி கூறியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தடை செய்யப்பட்டிருந்தாலும் பொலிசார் இப்படி வலுக்கட்டாயமாக அப்பெண்ணின் புர்காவை கழற்றும் படி கூறியது கண்டனத்திற்குரியது என்று எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

மேலும் மருத்துவ முகமூடிகளுக்கு, கோமாளி போல அலங்காரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் சுமார் 150 பெண்கள் முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிகிறார்கள்.

இருப்பினும் தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால், ஆஸ்திரியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



2 comments:

  1. It is not harm to open the FACE COVER for security reason. Why our society making it a big issue.
    It is not ISLAM even/Not In QurAn.
    If they love it very simple stay in Saudi Arabia & cover all the body as you like. By the way Saudi women started to open the face. Due to many problem in society ....

    ReplyDelete
  2. ஆண்களின் கழுகுப் பார்வையில் இருந்து பெண்கள் பாதுகாப்புப்பெற வேன்டுமாயின் புர்காவைத் தவிர்த்து ஒரு மாற்றீடு உலகில் கிடையாது.

    அதனால்தான் அல்லாஹ் அதனை நபி ஸல் அவர்களின் மனைவிமார்களுக்கு அதனைக் கடமையாக்கினான்.

    ஆயினும் அது உலக நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதனாலேயே அல்லாஹ் அந்த சட்டத்தை ஏனைய மக்களமீது கடமையாக்கவில்லை.

    அனுமதியுள்ள ஒரு விடயத்தை இப்படி சிக்கலாக்குவதே நம்முடைய அறியாத்தனமனமான பிடிவாதமான முஸ்லீம்களே.

    ReplyDelete

Powered by Blogger.