October 05, 2017

அபாயாவுடன் மத்ரசா சென்று, சிறுவனை இரத்தப் பரிசோதனைக்கு அழைத்துச்சென்ற பெண் - முஸ்லிம் பகுதியில் பரபரப்பு


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் குர்ஆன் மதரசாவொன்றிலிருந்து அபாயா அணிந்திருந்த பெண்ணொருவர் ஆறு வயதான சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வீடொன்றில் இடம் பெற்று வரும் மக்தப் எனப்படும் குர்ஆன் மதரசாவில், செவ்வாய்க்கிழமை (03) மாலை, அங்கு குர்ஆன் கற்பதற்காகச், சென்ற சிறுவன் ஒருவனை அங்கு சென்ற முக மூடி அணிந்திருந்த பெண்ணொருவர் அழைத்துச் சென்றுள்ளார். 

அபாயா அணிந்து முகத்தை மூடிய பெண்ணொருவர் குறித்த மதரசாவுக்கு சென்று அந்த மதரசாவை நடத்தும் பொறுப்பாசிரியையிடம் சிறுவனின் பெயரைக் கூறி அவரை அனுப்புமாறு கேட்டுள்ளார். 

 குறித்த சிறுவனை இரத்தப் பரிசோதனை செய்வதற்காக, அழைத்துச் செல்லப் போகின்றேன் எனவும் தான் சிறுவனின் மூத்தம்மா என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில், சிறுவனின் மதரசா அடையாள அட்டை மற்றும் சிறுவனின் பை என்பவற்றை அங்கு வைத்து விட்டு அந்த சிறுவனை முகத்தை மூடிய அந்தப் பெண் அழைத்துச் சென்றுள்ளார். 

இதேவேளை, குர்ஆன் மதரசாவின் பொறுப்பாசிரியை, சிறுவனின் தாய்க்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உங்கள் மகனை மூத்தம்மா வந்து அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். 

அப்படி அங்கு மூத்தம்மா யாரையும் தான் அனுப்ப வில்லை எனக்கூறி, பதற்றமடைந்த அந்த சிறுவனின் தாய், மதரசாவுக்கு தன்னுடைய மற்றுமொரு மகனை அனுப்பியுள்ளார். 

இந்த நிலையில், காத்தான்குடி ஆறாம் குறிச்சி டீன் வீதியில் குறித்த சிறுவனை, அபாயா அணிந்த அந்த இனம் தெரியாத பெண், சில்லறைக்கடை ஒன்றில், இனிப்பு பண்டம் வாங்கிக் கொண்டு நிற்பதை அவதானித்த சிறுவனின் சகோதரர் தனது சகோதரனைக் கண்டு அழுது சப்தமிட்டுள்ளார். 

இதனையடுத்து, அச்சிறுவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இனந்தெரியாத அந்தப் பெண், முச்சக்கர வண்டியொன்றில் ஏறி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

பின்னர் சிறுவன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சிறுவனின் தாய் மற்றும் சிறுவன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர். 

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை துரிதமாக நடாத்தி வருவதுடன், இது தொடர்பில் பலரிடமும் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துமுள்ளனர்.  

எம்.எஸ்.எம்.நூர்தீன்

14 கருத்துரைகள்:

Face cover srilanka wil thadai seiwazu niyayam than ...

muhathai thirakka waikka Shazi

Idai vaitu face cover i tadai seiya iyalaadu. Oruvar shirt or trouser ku ulle weapons matrum vedi gunduhalai easy aaha maraitu veikalaam. Adukahaa dress poduvadai tadai seiyanuma?

அறிவுள்ள சில முஸ்லிம்களே இது போன்று பல செய்திகள் வர முன்பு மூடி ஏமாற்றும் பெண்களிடம் ஒரு வேண்டுகோள் சிந்தியுங்கள் சமூகக் கேடுகள் தொடர இடமளிக்கதீர்கள்

Do not be emotional in blaming face cover. Look at the other mistakes that taken placed in this issue. People like u might even say No makthab class an many more.. student should have not been released without knowing the identity of the lady. 2nd No face cover women allowed to alone rather with a mate am in our society. 3rd people should not blame religious practise for their mistakes. MAY ALLAH MAKE US KNOWLEGEABLE IN DEEN AND PRACTISING IT IN OUR LIFE.

Risvi mufti இடம் கேளுங்கள் இவ்வாறு நிலை ஏற்படும் நேரத்தில் என்ன பத்வா எந்த இமாமை பின்பற்ற வேண்டும் என்று கேளுங்கள்

ஊர் இனண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டமாம்.face covering ஐ தடை செய்வதற்கு நம்மவரை வைத்தே ஆடப்படும் சதிராட்டமாக ஏன் இருக்கக்கூடாது.

அபாயா அணியும் பெண்கள் எவரும் முகத்தை மூடி அணிய தேவையில்லை முகத்தை மூட இதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் கிடையாது

Please don't issue fatwa here based on this incident. If you are a qualified Mufti then ok.. The investigation is still going on so don't make haste decisions.

யார் சொன்னது இஸ்லாத்தில் ஆதாரமில்லை என்று....
நபியவர்களின் மனைமனைவிமார்கள் முழுமையாக மறைக்கக் கூடியவர்களாகத்தான் இருந்தார்கள்...வரலாற்றைப் படித்துப்பாருங்கள் பத்வாக் கொடுக்க முன்னர்.

Fools argue on everything giving fodder to enemies.

அன்பார்ந்த சகோதரர்களே இஸ்லாம் தெளிவான மார்க்கமாகும் ஆனால் நாம்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லை பல வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம் முகத்தைப் மூடிக்கொண்டு போகும் பெண் காதலில் விழுந்ததை அறிந்த பெற்றோர் உடனடியாக திருமண ஏற்பாடுகளைச் செய்து காலை 9am திருமணம் அதனால் பலத்த பாதுகாப்பு அப்போது அந்தப் பெண்னின் தோழிகள் 3 பேர் முகத்தைக் மூடிக்கொண்டு 7.30am.வந்து 8.am வெளியேறுகிறார்கள் வீட்டு வாசலில் தகப்பன் மாமா சித்தப்பா இன்னும் பலர் நிற்கிறார்கள் 8.15 am அளவில் மணப்பெண்னைக் காணவில்லை ஒரே குழப்பம் கூச்சல் அவமானம் இதானால் சிலர் மயக்கம் எப்படி நடந்தது ஏனெனில் வாசலில் பலத்த பாதுகாப்பு இருந்தது ஒரு காரணம் தான் அந்த 3 பேரும் முகத்தைக் மூடிக்கொண்டு இருந்ததோ காரணம் ஆகவே சூழ்நிலை அறிந்து நடந்துகொள் என்று இஸ்லாம் நமக்கு அனுமதி அளித்து உள்ளது மேலும் தற்காலத்தில் முகத்தை மூடுவதால் நன்மையை விட தீமைகளே அதிகம் மேலும் இந்த பதிவை சமூக நலன் கருதி பதிவிடுமாறு admin அனபுடன் கேட்டுக் கொள்கிறேன்

நீங்கள் உங்கள் மனோ இசையில் சொல்வது எல்லாம் ஆதாரம் கிடையாது முதலில் அல் குர்ஆன் இல் இருந்து அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும்

Post a Comment