Header Ads



யாழ்ப்பாண தேசிய மீலாத் விழாக்கு, செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி

தேசிய மீலாத் விழா நிகழ்வுகள், இவ்வருடம் வடக்கை மையமாகக் கொண்டு, யாழ். மாவட்டத்தில் நடைபெறவுள்ளன. அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார் என, தபால்துறை அஞ்சல் அலுவல்கள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 2017ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா தொடர்பாக ஆராயும் விசேட முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்று, முஸ்லிம் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைத்து, இந்த தேசிய மீலாத் விழா இவ்வருடம் டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி, யாழ். ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அது குறித்த ஏற்பாடுகள் தொடர்பிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் முஸ்லிம்களுக்கான, போக்குவரத்து சுகாதார ஏற்பாடுகள் குறித்து இங்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதுடன், கலாசார நிகழ்வுகள் தொடர்பிலும் முடிவுகள் எட்டப்பட்டன.

No comments

Powered by Blogger.