October 02, 2017

இணைந்த வடகிழக்­கில் படித்த, பக்­கு­வ­மான முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­கத் தயார் - சம்­பந்­தன்

“இணைந்த வடக்கு – கிழக்­கில் படித்த பக்­கு­வ­மான முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்குத் தயார். நாம் அதற்­கும் பின்­னிற்­கப்­போ­வ­ தில்லை. ஆனால் முஸ்­லிம் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் சிலர் வழி­ந­டத்­தல் குழு­வில் கூறிய விடயங்­க­ளைக் கேட்­டால் நீங்­கள் வெட்­க­ம­டை­வீர்­கள். அவர்­கள், அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டக்­கூ­டாது. அதி­கா­ரங்­கள் மத்­தி­யில் (கொழும்பு அர­சி­டம்) இருக்க வேண்­டும் என்று கூறி­னார்­கள்”

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். மன்­னா­ரில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு, கிழக்கு தனித்­த­னி­யாக உள்­ளன. ஆனால் இணைப்பு விட­யத்­தில் முஸ்­லிம் சகோ­த­ரர்­கள் எம்­மு­டன் இணைந்து செயற்­பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு முகம்­கொ­டுத்த கஷ்­டங்­களை நான் அறி­வேன். அது பற்றி அதி­க­மாக பேச­வில்லை. இருப்­பி­னும் இந்த தரு­ணத்­தில் முஸ்­லிம் சமு­கத்­திற்கு ஒரு அழைப்பை விடுக்­க­வுள்­ளேன்.

நாம் சரித்­திர ரீதி­யாக வடக்கு கிழக்­கில் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றோம். நாம் தமிழ் பேசும் மக்­கள். வடக்­கி­லும் கிழக்­கி­லும் தான் தமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­றார்­கள். இந்த உண்­மையை எவ­ரும் மறு­த­லிக்க முடி­யாது. ஆகவே எமக்­குள் இந்த விட­யம் சம்­பந்­த­மாக இணக்­கப்­பாடு ஏற்­பட்டு இதனை சுமூ­க­மாக தீர்க்க வேண்­டும்.

வட­கி­ழக்­கில் கூட படித்த பக்­கு­வ­மான முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தயார். நாம் அதற்­கும் பின்­னிற்­கப்­போ­வ­தில்லை. ஆனால் உங்­க­ளு­டை­ய­பி­ர­தி­நி­தி­கள் சிலர் வழி­ந­டத்­தல் குழ­வில் கூறிய விடங்­களை கேட்­டால் நீங்­கள் வெட்­க­ம­டை­வீர்­கள்.

அவர்­கள், அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டக்­கூ­டாது. அதி­கா­ரங்­கள் மத்­தி­யில் இருக்க வேண்­டும். காணி அதி­கா­ரம் மத்­தி­யில் மாத்­தி­ரம் இருக்க வேண்­டும் என்­றெல்­லாம் கூறி­யி­ருக்­கின்­றார்­கள். இந்த விட­யங்­களை நீங்­கள் அறிந்­தீர்­களோ இல்­லையோ எனக்கு தெரி­யாது. ஆனால் இது தான் உண்மை.

1949ஆம் ஆண்டு தந்தை செல்­வா­வி­னால் தமி­ழ­ர­சுக்­கட்சி ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து அண்­ணன் அமிர்­த­லிங்­கத்­தின் காலம் என நீண்­ட­தொரு பய­ணத்­தினை மேற்­கொண்டு வரு­கின்­றோம். இன்­னும் பல முன்­னேற்­றங்­க­ளைக் காணப்­ப­தற்கு இட­முண்டு.

ஆறு மாதங்­க­ளுக்கு முன்­ன­தாக எமது நண்­பர்­கள் சிலர் எம்மை வழி­ந­டத்­தல் குழு­வி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கோரி­னார்­கள். குறிப்­பாக சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் வழி­ந­டத்­தல் குழு­வி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கூறு­கின்­றோம் என்று கட்­டளை இட்­ட­போது நாம் பதில் கூற விரும்­ப­வில்லை. அப்­போ­தும் நான் நிதா­ன­மா­கவே இருக்க வேண்­டும் என்றே கூறி­னேன் – என்­றார்.

10 கருத்துரைகள்:

We have very high regards towards the leaders like you.we as Muslims living in North and East prepare to accept the merger. But it is very much regret to note that the Tamil in the East specially in the Ampara District do not like to have a coastal district with the Muslims majority. Not only this - take Kalmunai as example. They need a separate DS and separate PS. Already they got the DS and fighting for separate PS.There are many more examples We can give. Under this circumstance how can we ask our people to support for the merger.

Dear seeni mohammed sideeque
வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் முட்கட்டை போட்டமையே கரையோரமாவட்டம் உருவாக முடியாமல் போனதிற்க்கு முக்கியகாரணம்.
நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
காத்தான்குடி. ஏறாவூர் போன்றபிரதேசங்களை பிரித்து தனி பிரதேசசபை பபிரதேசசெயலகம் அமைக்கமுடியுமென்றால் ஏன்தமிழர் கள் கல்முனை யில் தமது பிரதேசசெயலகத்தை கோரக்குடாது.
மட்டக்களப்பில் மட்டு மத்தி எனும் முஸ்லீம் வலயத்தை உருவாக்குவது முஸ்லீம் உரிமை என்றால்.ஏன் கல்முனை தமிழ் கல்விவலயம் அமைவதை முஸ்லீம்களால் பொறுக்க முடியவில்லை.
முஸ்லீம்களை போல் தமிழர் சிந்திருந்தால் சம்பூர் தம்பலகாமம் தமிழ் பிரதேச செயலகங்கள் என்றோ தோன்றியிருக்கும்.
அத்துடன் கல்முனைகுடியுடன் சாய்ந்தமருதுகாரனே இருக்கவிரும்பவில்லை அதை ஏற்க்கும் முஸ்லீம்கள் ஏன் கல்முனை தமிழனை இனவாதமாக பார்கிறீர்கள்.
வடமாகாணத்தில் ன்னாரில் வெறும் 5000முஸ்லீமூக்காக பெரும் நிலப்பரப்பில் முசலி உருவாக்க ப்பட்ட போது தமிழன் தடைபண்ணவில்லை.கல்முனை தமிழ் பிரதேசத்தை தரமுயர்த்த. விடாமால் ஹரீஸ்கள் தடுப்பது ஏன்.

படித்த பக்குவமான வடக்கு முதலமைச்சர் என்ன செய்கிறார் என்பத உங்களுக்குத் தேரியாதா?

என்ன செய்தவர் உங்களுக்கு.ஊழல் செய்த தனது அமைச்சர்களை தூக்கி எறிந்தார் ஞபகம் வருதா??

This comment has been removed by the author.

Mr Kumar Kumaran,

I don't want to have a lengthy discussion with you as I have the fear that we may make distant between both the communities. In nutshell I will give the following to recollect your memory.

Then UNP government took action to declare the coastal district and while that was in process the JVP and the HINDU MAHA SABAI OF AMPARA DISTRICT staged the protest against the coastal district in Amparai and Kalmunai as well. If you need document related to this could be made available to you.

Therefore we go by the reality and not by imagination. My kind request to you is to refrain from disturbing the unity between the Tamil and Muslim community in the East. Thank you.

Mr.seeni mohameed sideeque,
ரணில் கரையோர மாவட்டத்தை தர ஒப்புக்கொண்ட போது அதனை கெடுத்தது முஸ்லீம்தரப்பினரே.
அதாவுல்லா அக்கரைபற்று மாவட்டம் என்றும் முகாவில் சிலர் கல்முனைமாவட்டம் என்னுறும் சண்டை இட்டு சந்தர்ப்பத்தை நழுவவிட்டனர்.
இப்போதும் ரிசாட் பதியுதின் ஒலிவில் மாவட்டம் வேண்டுமென்கிறார்.
ஹரிஸ் கல்முனைமாவட்டம் வேண்டுமென்கிறார்.
அதாவுல்லா அக்கரைபற்று மாவட்டம் வேண்டு மென்கிறார்.
பழியைமட்டும் தமிழன்மீதும் Jvp மீதும் போடுகிறீகளே.

Mr Kumar Kumaran,

You are trying to twist the subject which I don't like. As I am a professional I am always maintaining the same. I have told you the truth and it is up to you to accept it or not. I am sure majority of the people know the subject and therefore I am not worried.

Mr.seeni mohamed sideeque
உண்மையிலேயே அம்பாறை செல்வதும்.மொழியுமே பிரச்சினை என்றால் மாவட்ட செயலகத்தை கரையோரத்திற்கு மாற்றி தமிழ்மொழி அரசஅதிபரை நியமித்தால் போதும்.
வடகிழக்கை இணைத்து கிழக்கு மூவின மாகாணத்தை தமிழ்மாகாணமாக்க முடியாது எனின்.முஸ்லீம்கள் 43% தமிழர் 18% சிங்களர் 39% உள்ள பல்லின மாவட்டத்தை சிதைத்து முஸ்லீம் மாவட்டம் அமைகக்க கோருவது பிழைதானே.

உங்களுடைய பிற்சந்ததியினர் முஸ்லிம்கள் ஒருவரும் பக்குவமுடையவர் அல்ல என கூறமாட்டார்கள் என என்ன நிச்சயம்?

Post a Comment