October 03, 2017

முஸ்லிம் அரசியல்வாதிகள், வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யுடன் செவ்வி
நேர்­கண்­டவர்: எஸ்.என்.எம்.ஸுஹைல்

விகி­தா­சார தேர்தல் முறை­யில்தான் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காத்­துக்­கொள்ள முடியும் என முஸ்­லிம்கள் நம்­பு­கின்­றனர். இந்­நி­லையில், தொகுதி முறை முஸ்­லிம்­க­ளுக்கு பாத­க­மாக அமைந்து விடு­மென்று அச்சம் கொள்­கின்­ற­னரே?

விகி­தா­சார தேர்தல் முறை­யினால் கடந்த காலங்­களில் பல பிரச்­சி­னை­க­ளுக்கு நாடு முகம்­கொ­டுத்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக, பணம் இருப்­ப­வர்­க­ளுக்கு இது சாத­க­மாக அமைந்­தது. மாவட்டம் முழு­வதும் விருப்பு வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள அலைய ­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டி­ருந்­தது. ஒரே கட்­சிக்குள் போட்­டித்­தன்­மைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. இதனால் அனே­க­மானோர் இத் தேர்தல் முறைக்கு கடந்த பத்­து­ப­தி­னைந்து ஆண்­டு­க­ளாக எதிர்ப்பு தெரி­வித்து வந்­தனர். 

பல சந்­தர்ப்­பங்­களில் பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளினால் இத்­தேர்தல் முறை மாற்­று­வது குறித்த வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. 2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இதே வாக்­கு­று­தியை வழங்­யி­ருந்தார். யாரும் இதனை நிறை­வேற்ற முன்­வ­ர­வில்லை. 2015 ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பொதுத் தேர்­தலிலும் நாம் இதனை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கி­யி­ருந்தோம். மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­ய­டிப்­ப­டையில், உள்­ளூ­ராட்சி தேர்தல் முறையை மாற்­றினோம். அத்­துடன், மாகாண சபை தேர்தல் முறை­யையும் மாற்­ற­வேண்­டு‍­மென்றே இத் திருத்­தங்­களை முன்­வைத்தோம்.

விருப்பு வாக்­கு­மு­றைமை வேண்டாம் என கூறு­வதன் காரணம் அதி­க­மான தொகு­தி­களில் இன்று எந்தக் கட்­சி­க­ளி­னாலும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டா­தி­ருக்­கி­றது. இதனால், பல பகு­திகள் எந்த தரப்­பி­ன­ராலும் கவ­னிக்­கப்­ப­டா­திருக்­கி­றது. பெரும்­பாலும் பணப் பல­முள்­ள­வர்கள் மாவட்­ட­மு­ழுதும் எவ்­வா­றா­யினும் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தா­லேயே இந்த பிழைகள் ஏற்­ப­டு­கின்­றன. ஒரே கட்­சிக்குள் வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையே கடும் போட்டி நில­வு­வ­தால் கடந்த காலங்­களில் பல்­வேறு அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டதை நாம் அனு­ப­வத்தில் கண்­டி­ருக்­கிறோம். 

சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை எவ்­வாறு உறுதி செய்­வ­தென்று நாம் பேசியே தீர்­மா­னித்­துக்­கொள்ள வேண்டும். தேர்தல் முறை மாற்­றத்தை எல்லா தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால், அந்த மாற்­றத்­தின்­போது, சிறு­பான்மை, சிறு கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காத்­துக்­கொள்ள சட்ட ஏற்­பா­டுகள் செய்ய வேண்­டிய அவ­சியம் இருக்­கி­றது. 

மாகாண சபை திருத்தம் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றுக்­கு­கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அர­சாங்­கத்­திற்­குள்ளே இருக்கும் சில முஸ்லிம் பிர­தி­நி­திகள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது. ‍அப்­படி யாரும் செயற்­பட்­ட­னரா?

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் தொடர்பு இருந்­தது பற்றி எனக்கு தெரி­யாது, அர­சாங்­கத்­தி­லுள்ள சிறு­பான்மை கட்­சிகள் இந்த திருத்தம் வந்­த­போது பிர­தமர், ஜனா­தி­ப­தி­யோடு பேச்­சு­வார்த்தை நடத்தி பல திருத்­தங்­களை முன்­வைத்­தனர். நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இருந்­தாலும் நாமும் அவ்­வா­றான சில யோச­னை­களை முன்­வைத்தோம். அவர்­க­ளுடன் இணைந்து ஆத­ர­வ­ளித்தோம்.  அர­சாங்­கத்­திற்கு வெளியில் அதி­கா­ரத்­துக்கு வரத் துடித்­துக்­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சிலர் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­டனர். 

நாம் விருப்­பத்­துடன் மாகாண சபை தொடர்­பாக கொண்­டு­வ­ரப்­பட்ட பாரா­ளு­மன்ற திருத்­தச்­சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் ஊடக அறிக்கை விடு­கின்­றனர். அத்­தோடு அவர்கள் ஆத­ர­வ­ளிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தா­கவும் மக்கள் முன் தெரி­விக்­கின்­ற­னரே. இவ்­வாறு ஏதா­வது நடந்­ததா?

யாரும் அவ்­வாறு வற்­பு­றுத்­தப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு விருப்­ப­மாயின் அன்று வாக்­க­ளிக்­காமல் இருக்­க­வி­ருந்­தது. அன்று மஹிந்த ராஜ­பக் ஷ சில விட­யங்­க­ளுக்கு ஆத­ரவு திரட்ட அச்­சு­றுத்­தி­ய­துபோல் நாம் செய்­ய­வில்லை. அத்­தோடு கோப்­பு­களை வெளி­யி­டுவோம் என பய­மு­றுத்­தவும் இல்லை. கோத்தா­ப­யவை பயன்­ப­டுத்தி இலக்­கத்­த­க­டுகள் இல்­லாத வாக­னங்கள் மூலம் யாரும் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­ப­ட­வில்லை. அப்­படி அவ­சியம் இந்த அர­சாங்­கத்­திற்­கில்லை.

மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தின் கீழ் 2013 இல் உள்­ளூ­ராட்சி தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்டமூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அப்­போது மாகாண சபை உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக அதா­வுல்லாஹ் இதனை சமர்­ப்பித்தார். அதில் 70 வீதம் தொகுதி அடிப்­ப­டை­யிலும் 30 வீதம் பட்­டியல் மூலமும் என்றே இருந்­தது. இன்று பாரா­ளு­மன்றில் இருக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் எந்த மறுப்­பு­மின்றி அன்று கையு­யர்த்­தினர். அன்று முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறையும் என்று அவர்­க­ளுக்கு நினை­விற்கு வர­வில்­லையா? மஹிந்­த­வையும் அவ­ரது குடும்­பத்­தையும் மீண்டும் மீண்டும் ஆட்சி பீட­மேற்ற 18 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போதும் எந்த எதிர்ப்­பு­மின்றி ஆத­ர­வ­ளித்­தனர்.

இன்று பாரா­ளு­மன்றில் எமது அர­சாங்­கத்தின் கீழ் சிறு­பான்மை கட்­சி­களின் கோரிக்­கை­க­ளுக்­க­மைய உள்­ளூ­ராட்சி தேர்தல் முறையில் 60 வீதம் தொகுதி அடிப்­ப­டை­யிலும் 40 வீதம் பட்­டியல் அடிப்­ப­டை­யிலும் என திருத்­தி­யி­ருக்­கிறோம். மாகாண சபை தேர்­த­லிலும் சிறு­பான்மை மற்றும் சிறு கட்­சி­களின் ஆலோ­ச­னை­களை உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறோம். அத­னா­லேயே, எந்த தொகு­தி­யையும் வெற்­றி­கொள்ள முடி­யாத மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் இந்த திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யது. 

அதா­வுல்லா கொண்­டு­வந்த திருத்­தத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏது­வான வகையில் பல்­அங்­கத்­துவ தொகு­தி­களும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. சிங்­கள பகு­தி­களில் பல அங்­கத்­த­வர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கமைய திருத்­தங்கள் இருந்­தன. மத்­திய கொழும்பின் அமைப்­பாளர் என்­ற­வ­கையில் எமது ஆலோ­ச­னை­கூட அன்று பெறப்­ப­ட­வில்லை. அனைத்தும் பசில் ராஜ­ப­க் ஷவின் தேவைக்­கேற்­ற­துபோல் இடம்­பெற்­றன. இப்­ப­டி­யெல்லாம் இருந்த அந்த திருத்­தத்­திற்கு எந்த ஆட்­சே­ப­னை­யு­மின்றி அன்று கை உயர்த்­தி­ய­வர்­கள்தான் இன்று மக்கள் முன் நடிக்­கின்­றனர். 

இன்று சில இயக்­கங்கள் தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றன. அவர்­களை இயக்­கு­பவர் யாரு­மல்ல கோத்தாபய என்­பது எல்­லோ­ருக்கும் தெளி­வாக தெரியும்.


அன்று மஹிந்த முஸ்லிம்களுக்கு எதிராக நேரடியாக செய்தவற்றை, இன்று நல்லாட்சி அரசாங்கம் மறைமுகமாக செய்வதாகத் தெரிகிறதே?

இந்த அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறது. அத்தோடு, முஸ்லிம் கட்சிகளின் அபிப்பிராயங்களை ஆராய்கிறது. மற்றும் மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு ஆணைக்குழுக்களையும் நியமிக்கிறது. அதனடிப்படையிலேயே இந்த அரசாங்கத்தால் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

20 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. இதற்கு பதிலாக தேர்தல் முறையில் மாற்றங்களே ஏற்படுத்தப்பட்டன. தேர்தல் முறை மாற்றப்பட்டமை முஸ்லிம்களுக்கு எதிரானவை, முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன, முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சினை என விடயங்கள் பற்றிய தெளிவு இல்லாத சிலர் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இது கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாக இருந்த சிலரும் கோத்தாபயவின் பின்னாலிருந்து செயற்படும் இயக்கங்களுமே இந்நடவடிக்கையில் முன்னணியில் இருக்கின்றன. இதந்தக் குழுவினர் யார் என்ப‍து குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

3 கருத்துரைகள்:

அப்ப நீங்க என்ன கூந்தலுக்கு கைய உயர்த்தின?

Kalam kadantha pin suriya namaskaram ethirkku.

The Muslim Voice” already has exposed/warned the Muslim Community of how these unscrupulous, dishonest and deceptive Muslim politicians like MP Mujeebu Rahuman will stage dramas and issue “PRESS STATEMENTS” and give interviews to Social Media to “DECEIVE” the poor Muslim Community voters. These Muslim politicians have been well taken care by the “Yahapalana Government” at the cost of the poor and humble Muslim vote bank and are enjoying the “POSITION and PERKS” even today. As such, Muslims in Sri Lanka do NOT have a voice – a POLITICAL VOICE for that purpose. So how will the “Yahapalana Government” to any of these Muslim politicians. Is this NOT logic – “POLITICAL LOGIC”? We have lost our POLITICAL/COMMUNITY “VOICE” since our vote-bank had been traded by our politicians.The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The question is, WILL THE MUSLIMS LOOSE THEIR PRIDE AND ACCEPT REALITY? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to chase away these deceptive and hoodwinking Muslim politicians and to face any new election in the coming future, Insha Allah.THIS IS THE ONLY WAY THE MUSLIMS CAN SAFEGUARD THE MUSLIM COMMUNITY AGAINST THE YAHAPALANA GOVERNMENT (or for that matter any government). AMENDING ANY LEGISLATIVE ENACTMENTS ALREADY ENACTED BY PARLIAMENT AND MADE LAW IN THE COUNTRY WILL NOT HELP. The Yahapalana government (President Maithripala Sirisena and PM Ranil Wickremaratne) has forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

Post a Comment