Header Ads



காத்தான்குடி நகர சபையே, மாநகர சபையாக தரமுயர்த்தப்படும் - தமிழ் அரசியல் தலைமைகள் மக்களைக் குழப்புகிறார்கள்

காத்தான்குடி நகர சபையே மாநகர சபையாக தரமுயர்த்தப்படும். புதிய காத்தான்குடியிலுள்ள கிராமங்களை உள்ளடக்கியே காத்தான்குடி பிரதேச சபை புதிதாக உருவாக்கப்படும். மாறாக தமிழ் அரசியல் தலைமைகள் கூறுவது போன்று மன்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபை மற்றும் மன்முனை வடக்கு மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து ஒரு இஞ்சளவு நிலமோ – ஒரு முஸ்லிம் குடும்பமோ புதிய உருவாக்கத்தில் உள்வாங்கப்படமாட்டாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

காத்தான்குடி நகர சபை மாநகர சபையாக தரமுயர்த்தல் மற்றும் காத்தான்குடி பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் மக்களைக் குழப்பும் வகையில் முடுக்கி விட்டுள்ள பொய் பிரசாரங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

காத்தான்குடி நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தி காத்தான்குடி பிரதேச சபையொன்றை புதிதாக  உருவாக்குவது தொடர்பான பத்திரிகை விளம்பரத்தை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காத்தான்குடி பிரதேச சபை உருவாக்கத்தின் போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு உற்பட்ட பிரதேசங்களையும், மன்முனைப்பற்று ஆரையம்பதிக்கு உற்பட்ட முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதாக அதனை அமைக்க நாங்கள் முயற்சி செய்து வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தமிழ் அரசியல் தலைமைகள் பரப்பி வருகின்றனர். 
தற்போது காத்தான்குடி நகர சபையால் நிர்வகிக்கப்படுகின்ற காத்தான்குடி நகர சபை எல்லையே மாநகர சபையாகவும், காத்தான்குடிக்குள் இருக்கின்ற  புதிய காத்தான்குடியிலுள்ள கிராமங்களை உள்ளடக்கியே காத்தான்குடி பிரதேச சபை உருவாக்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மாறாக மன்முனைபற்று ஆரையம்பதி பிரதேச சபை மற்றும் மன்முனை வடக்கு  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உற்பட்ட  பகுதிகளிலிருந்து ஒரு இஞ்சளவு நிலத்தையோ – ஒரு முஸ்லிம் குடும்பத்தையோ காத்தான்குடி நகர சபையோடு அல்லது புதிதாக உருவாக்கப்படவுள்ள காத்தான்குடி பிரதேச சபையோடு இணைக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கில்லை. அவ்வாறான எந்தவித யோசனையும் - ஆலோசனையும் யாரும் முன்வைக்கவுமில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய் பிரசாரமாகும். 

 ஆகவே, இது தொடர்பாக மிகத்தெளிவான அறிவுருத்தல்களும் - ஆலோசனைகளும்  வழங்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடியில் வாழ்கின்ற 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் வாழ்கின்ற மக்களது காணிப் பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறன தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாறாக தமிழ் அரசியல் தலைமைகள் கூறும் விசமக்கருத்துக்கள் போன்று எதுவும் இல்லை என்பதை நான் மிகத் தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். 
அத்துடன், மன்முனைப் பற்றிலிருந்தோ அல்லது மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச சபையிலிருந்தோ, மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்தோ  ஒரு இஞ்சளவு நிலமோ – ஒரு முஸ்லிம் குடும்பமோ இந்த புதிய உருவாக்கத்தில் உள்வாங்கப்படமாட்டாது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன். – என்றார். 

No comments

Powered by Blogger.