Header Ads



முஸ்லிம்களை சம்பந்தன் அவமானப்படுத்துகிறாரா..?

இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு மாகாண‌த்தில் ப‌டித்த,‌ த‌ர‌மான‌ முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ரை நிய‌மிக்க‌ நாம் த‌யார் என‌ திரு. ச‌ம்ப‌ந்த‌ன் சொல்வ‌து கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற உயர் சபை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிpத்ததாவது,

வ‌டக்கையும் கிழ‌க்கையும் இணைத்து விட்டு காலா கால‌மும் முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ரை தமிழ் மக்கள் நிய‌மிப்பார்க‌ளா? இல்லையே. குறிப்பிட்ட‌ சில வருடங்களில் அல்லது ஐந்து வ‌ருட‌ங்க‌ளின் பின் முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ மாட்டார். அப்ப‌டியாயின் இந்த‌ ஐந்து வ‌ருட‌த்துக்கு ம‌ட்டும் வாழும் முஸ்லிம்கள் நாம் முத‌ல‌மைச்ச‌ரை பார்த்து ர‌சிக்க‌ அடுத்த‌ தலைமுறை கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் காலாகாலமாக இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் அடிமைக‌ளாக‌ இருக்க‌ நாம் விட‌ வேண்டுமா?.

திரு. ச‌ம்ப‌ந்த‌னுட‌ன் உற‌வாடும் முஸ்லிம் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் த‌ம்மை ம‌ட்டுமே பார்க்கும் சுய‌ந‌ல‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தைக்க‌ண்ட‌ அவர்  இப்ப‌டித்தான் எல்லா முஸ்லிம்க‌ளும் பதவி வெறிபிடித்தவர்களாக இருப்பார்க‌ள் என்ற‌ க‌ற்ப‌னையில் இவ்வாறான‌ சிறு பிள்ளைத்த‌ன‌மான‌ க‌ருத்தை கூறி முஸ்லிம்க‌ளை ஏமாற்ற‌ முணைவ‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம்.

உலமா கட்சியை பொறுத்த வரை முஸ்லிம் முதலமைச்சர். தமிழ் முதலமைச்சர், சிங்கள முதலமைச்சர் என்ற கோசத்தை மறுக்கிறது. இனவாதம் இல்லாத, சகல மக்களையும் சமமாக பார்க்கும் ஒரு கிழக்கு மகன் கிழக்கின் முதலமைச்சராக வரவேண்டுமென்பதையே அன்று முதல் இன்று வரை சொல்லி வருகிறோம்.

இது வ‌ரை நாம் கிழ‌க்கில்; முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ர்க‌ளை க‌ண்டு விட்டோம். அவ‌ர்க‌ளால் ச‌மூக‌ம் க‌ண்ட‌ ந‌ன்மைக‌ளை விட‌ சோர‌ம் போனதே மிக அதிக‌ம். இந்த‌ நிலையில் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைந்து 17 வீத‌மாக‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் முத‌ல‌மைச்ச‌ர் த‌மிழ் கூட்ட‌மைப்பின் விளையாட்டுப்பிள்ளையாக‌வே இருப்பார் என்பது யதார்த்தம். அப்ப‌டிப்ப‌ட்ட‌ முதல‌மைச்ச‌ர் முஸ்லிம் காங்கிர‌சிலிருந்து பெற‌ப்ப‌ட்டால் அவ‌ர் மிக‌ இல‌குவாக‌ ச‌மூக‌த்தை விற்று விடுவார்.  ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தின் பெறமதியான வாக்குகளை பணத்துக்கும் பதவிக்கும் விற்றவர்களுக்கு இது மிகவும் எளிதானதாகும்.

ஆக‌வே முஸ்லிம் முதலமைச்சர் பதவி கொடுத்தால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு கிழக்கு முஸ்லிம்கள் உடன்படுவர் என நினைத்து சொல்வது திரு. சம்பந்தன் சொல்வது கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாகும்.  ஆகவே வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் நிலையில் தமிழ் முஸ்லிம் உறவைக்கட்டியெழுப்புவது எப்படி என்பதை தமிழ் முஸ்லிம் நிரந்தர உறவில்  அக்கறையள்ள, வடக்கு கிழக்கை எக்காரணம் கொண்டும் இணைக்க கூடாது என்ற கொள்கை கொண்ட  உலமா கட்சி போன்ற கட்சிகளுடன் பேச  திரு. சம்பந்தன் போன்றோர் முன்வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. 

9 comments:

  1. கிழக்குமாகாணம் தனித்திருந்தாலும் முஸ்லீம்கள் முதலமைச்சர் ஆவதுகடினம்.வடகிழக்கில் இருமுதமைச்சர் முறையில் ஒருமுதலமைச்சர் ஒரு துணைமுதலமைச்சர் என இருசமுகமுதமைச்சர்களை வழங்கும் பரிசீலனையை த.தே.கூ எப்பவோ முன்வைத்தது.அதிகாரம்மிக்க நிலையான தூனைமுதல்வர் பதவி அதுவும் அகண்ட வடகிழக்கின் தூணைமுதல்வராக முஸ்லீம் கள்திகழ்ந்திருக்கலாம்.நிரந்தரமற்ற முதலமைச்சர் பதவிக்கு அது மேலானது.
    முஸ்லீம் அரசியல்வாதிகளின் பிரச்சினை இதுவல்ல தமிழர் பிரச்சினை தீரக்கூடாது தீர்ந்தால் அவர்கள் அமைச்சுக்கு ஆபத்து.கிழக்கின் முதலமைச்சரல் வடக்கின் முஸ்லீம்களுக்கு என்பயன்??
    வடகிழக்கின் துணைமுதல்வரால் யாழ்பாணம்.சாவச்சேரி முசலி முஸ்லீம்கள் என எல்லாமுஸ்லீமூம் நன்மை பெறலாம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Inaippu saatthiyamillai printhu iruppathe kilakku Muslim kalukkum tamilarkalukkum siranthathu..

    ReplyDelete
  4. கடந்த ஜனாதிபதி தேர்தல் ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தங்களுக்குரிய அமைச்சுக்களையும் இரா சம்பந்தன் வடகிழக்கு இணைப்பையும் கேட்டிருந்ததாக அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த ஆட்சி மாற்றத்தின் போது பலரும் பல கோரிக்கைளுக்கு மத்தியில் மைத்திரி - ரணிலுடன் இணைந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுக்கு குறித்த அமைச்சுக்களை மீளு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு அமைச்சுக்கள் சுகபோகங்கள் தேவையில்லை வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ் புசும் மக்களுக்கு சம உரிமை இந்நாட்டில் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்ததாக குறித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
    Thanks-ceylon muslim

    ReplyDelete
  5. After the independence of India, The mahatma kanthi call to mohamed ali jinna for crowned upon his head as a priminister to join India but he said that i am not ready to be a tail of the lion but i want to be a head of an ant please give our Pakistan separately. The issue of joining north and east is also like that. The mohammed ali jinna's statement is a suitable answer for honorable Sambathan's statement.

    ReplyDelete
    Replies
    1. too foolish,
      Parkistans majority 95% muslims,and east is 64% tamil and sinhala majority,
      88%land area belongs to tamils and sinhalese,

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. And thats why parkistan is home of terrorism and india is largest Democratic society in the world,😜😜😜

      Delete
  6. Group of foxes (Sampanthan, Ranil, Rauf and Norway) are plan together to merge North and East and weaken the muslim society of North and East from every angle.... it reminds the past of after 1987-! even after 2002!!

    ReplyDelete

Powered by Blogger.