Header Ads



முஸ்லிம்களின் தலையெழுத்து பரிதாபகரமானதா..?


-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் முஸ்லிம் கட்சித் தலைமைகளாவது ஒன்று சேர்ந்து தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுத்து ஆக்கபூர்மான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் வெவ்வேறான பாதையில் பயணிக்கும் போக்கானது சமூகத்தின் மத்தியிலும் பிரிவினகளை அதிகரிக்கச் செய்து ஆபத்தான நிலைக்கே இட்டுச் செல்லும்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எழுந்த நிலைமைகள், இந்தச் சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு தினத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விரும்பத்தகாத செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானிக்கும் போது எமது சமூகம் இன்னும் ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடும் தலைமைகளைக் கொண்டதாக காணப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இந்நாட்டு முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் தேசியக் கட்சிகளுடன் இணைந்து அதிகாரத்திலிருந்த போது அவர்களால் எமது சமூகம் பெற்றுக் கொண்ட நன்மைகளை விட எங்களுக்கென தனியான முஸ்லிம் அரசியல் கட்சிகள் உதயம் பெற்ற பின்னர் நாம் அடைந்த தீமைகளும் பின்னடைவுகளுமே அதிகம் என்று கூறக் கூடிய அளவுக்கு நாங்கள் ஆக்கப்பட்டுள்ளோம் என்பது கவலைக்குரிய விடயம்.

மேலும், இந்த நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை தோற்கடிக்கச் செய்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு என எமது தலைமைகள் மார்தட்டிக் கொள்வது மட்டும்தான் இன்று எஞ்சியுள்ளது. இந்த அரசின் ஊடாக ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியாத கையறு நிலையில் எமது அரசியல் தலைமைகள் உள்ளன. இந்த விடயத்தில் நாங்கள் இன்றைய நல்லாட்சி மீது முற்று முழுதாக குற்றம் சொல்வதும் தவறு.

அரசியல் ரீதியிலான போட்டிகள்…. இதனை நானே செய்ய வேண்டும்… நீ செய்யக் கூடாது… என்ற துர் எண்ணங்கள். காட்டிக் கொடுப்புகள்… காரணமாகவே நல்லாட்சியிலும் கூட முஸ்லிம் சமூகம் எவ்வித விமோசனமும் அற்றவர்களாக காணப்படுகின்றனர். முஸ்லிம் தலைமைகளின் பல்திசை முரண்பாடுகளை இன்றைய அரசும் தங்களுக்குச் சாதக சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கச்சிதமாக தனது காய் நகர்த்தலை முன்னெடுத்துச் செல்கிறது

இந்த நிலையில் தமிழ் பேசும் அரசியல் தலைமைகளின் இலக்குகள் வேறானவை என்பதனைச் சற்றுச் சிந்தித்து பாருங்கள்.. சீ.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் சம்பந்தன் ஐயாவுக்குமிடையில் முரண்பாடுகள், ஐக்கியமின்மை…. மறுபக்கம் பல கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் முரண்பாடுகள்… சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கருத்தைக் கூறுகிறார். சுமந்திரன் இன்னொரு கருத்தைக் சொல்கிறார். சித்தார்த்தன் ஒரு கருத்து.. சிவாஜிலிங்கம் மற்றொரு கருத்து. இது போன்ற கிழக்கிலும் தமிழ் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களிடையே பல்வேறு முரண்பாடான கருத்துகள் உள்ளன.

ஆனால் தமிழர்களின் உரிமைகள், அபிலாஷைகள் நலன்கள் என்று வரும் போது தங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அனைத்தையும் களைந்து நாங்கள் தமிழர்கள் என்ற விடயத்தில் உடன்பாடு கண்டவர்களாக ஒருமித்துச் செயற்படுகிறார்கள்.குரல் கொடுக்கிறார்கள். வெற்றியடைகிறார்கள்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடும் விமர்சனத்துக்கு உட்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட தமிழர் நலன் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முன்னெடுப்புகளுக்கு ஓர் ஊன்று கோலாக நிற்கிறார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பாத்திரமும் முக்கியமானது. அவ்வாறிருந்தும் அவர்கள் ஆட்சியில் எந்த அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளாமல் தான் சார்ந்த சமூகத்தின் அபிலாஷைகள், உரிமைகள், இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து பயணித்து அதில் வெற்றி பெற்று வருகின்றனர்.

அதே போன்று இன்று அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதா கிருஷ்ணன் ஆகியோரையும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இரு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மலையக மக்களின் நன்மை கருதி, தங்களது தாய் கட்சிகள் வேறாக இருக்க, வேறொரு அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுகிறனர். அதன் மூலம் இன்று மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் அவர்கள் இந்த நல்லாட்சி மூலம் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், கட்சிகள் வேறு, கருத்து முரண்பாடுகள் வேறு என்ற நிலையில் சமூகம் என்று வரும் போது அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு அமைக்கின்றன என்பதனை எங்களது முஸ்லிம் தலைமைகள் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளன.

சின்னஞ் சிறிய விடயங்களாக என்னால் நோக்கப்படும் சாய்ந்தமருதுக்கு ஒரு உள்ளூராட்சி மன்றத்தை ஒற்றுமைப்பட்டு பெற்றுக் கொடுக்க முடியாத, மாயக்கல்லிமடு புத்தர் சிலையை ஒரே குரலில் கடுமையாகக் கூறி அகற்றச் செய்ய முடியாத, வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றும் விடயத்தில் ஒருமித்து குரல் கொடுக்க முடியாத எமது தலைமைகளால், எமது உரிமைகள், அபிலாஷைகள் என்ற பாரிய பொறுப்புமிக்க விடயங்கள் நிறைவேற்றப்படாது அல்லது பறி போகின்ற நிலைமைகள் வரும் போது அவற்றை எமது முஸ்லிம் தலைமைகள் ஒன்றித்து குரல் கொடுத்து பெற்றுத் தருவார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருந்தால் அது எமது வடிகட்டிய முட்டாள் தனமே.

எனவே, பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளை ஒன்றிணையச் செய்வதே சமூகம் என்ற வகையில் எம் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனை முன்னின்று செய்வது யார்? முஸ்லிம் மதத் தலைமைகளே, அமைப்புகளே, புத்தி ஜீவிகளே, சமூக ஆர்வலர்களே சிந்தியுங்கள், செயற்படுங்கள்.

ஏனெனில், நாங்கள் மிகுந்த கடினமானதொரு எதிர்காலத்தை துன்பியலுடன் முகங்கொள்வோராக உள்ளோம் என்பதனை மனதில் கொள்ளுங்கள்

6 comments:

  1. Mr.A.H.siddik kariapper.the writer,send the messages to all political party n specially,our muslim ulema safai,prominent educators,university lecturers,all of lawyers,all of reports of news paper,n social worker,n moovemet of NGO s together joining make strong voices to the present government.that's only way to our muslim ummah want to do.that's only our duty to our future generation.

    ReplyDelete
  2. It is very much regret to note here that we don't have political leaders now but we have political traders. Therefore no point to waste our time here but make an alternative to join with the national level parties as did by our leaders like late Dr Badi-uddin -Mahmoud. The present Muslim leaders have no time to concentrate on our problems as they need more time to fight among themselves and to concentrate on their own business.

    ReplyDelete
  3. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The media will play their role to misguide the sincere and "appaavi Muslimgal". Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbaisely. WHAT EVER PARTY MUSLIMS MAY CONTEST, IT IS CLEAR THAT FAIZER MUSTHAPA HAS MADE OUR REPRESENTATION ABILITY TO BE REDUCED FROM 125 TO 60. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. A Muslim Alliance could be a very good alternative approach, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  4. சகோதரர் காரியப்பர் அவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் அரசியலில் உள்ளார்கள் என புரிந்து கொள்ளாமல் இந்தக் கட்டுரையை எழுதி இருப்பதையும், ஒன்றிணையுமாறு வேண்டிக் கொண்டிருப்பதும் இன்னும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் செய்வதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாததையும், இவர்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக அரசியலில் இல்லை என்பதையும் அறியாததையுமே எடுத்துக் காட்டுகின்றது.

    சகோதரர் அவர்களே, சமூகத்திற்காக இவர்கள் அரசியலில் இருந்தால் ஏன் இவர்களிடையே போட்டி நிலவ வேண்டும், சமூகத்தின் நன்மையை மாத்திரம் நோக்கமாக கொண்டவர்களிடம் போட்டி நிலவாது. சகோதரத்துவம்தான் நிகழும். இப்படிப்பட்டவர்களிடம் சமூகத்திற்காக ஒத்துமையாகுங்கோ, உரிமைகளுக்காக போராடுங்கோ என இன்னும் கேட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன். எத்தனை கட்டுரைகள் இதுவிடயமாக வெளிவந்துவிட்டது. அவர்கள் கட்டுரைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் பதிலளித்தார்களா. உங்களின் பொன்னான நேரத்தை இப்படியான கட்டுரைகளை வெளியிட்டு வீண்விரயம் செய்யாமல் வேறு ஏதாவது சமூகத்திற்கு பிரயோசனமான விடயங்களை செய்ய முயற்சி செய்யுங்கள்.

    இன்று முஸ்லிம் பெயர்களை கொண்டவர்கள் எவ்வாறு பிர்அவுன் இஸ்ரவேலர்களை தனது கூலிப்படைகளை வைத்துக்கொண்டு அடக்குமுறை ஆட்சி நடாத்தினானோ அதேபாணியில்தான் இவர்களுகம் இன்று அரசியல் செய்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக யாரும் வாய்திறக்க முடியாது. அப்படி திறந்தால் செய்ய வேண்டியதை செய்வார்கள். உலமாக்களும், அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சமூக ஆவலர்கள் என அனைவரும் அயோக்கியர்களுக்கும், அவர்களின் முகப்புத்தக வீரர்களுக்கும், கூலிப்படைகளுக்கும் அடங்கி, பயந்து, தங்களது குடும்ப அங்கத்தவர்களின் நன்மை கருதி பயந்து ஒடுங்கி வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் சமூகத்திற்காக இனையுமாறு கேட்கின்றார் சகோதரர் காரியப்பர். இன்னும் இவர்களை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தக்க விடயமாகும்.

    இனிமேலும் முஸ்லிம் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லாமல், அயோக்கியன்களை தெரிவு செய்த முட்டாள்களையும், அரைகுரை கல்வியுடன் இந்த அயோக்கியன்களின் கால்களை நக்கிக் கொண்டு திரியும் முகப்புத்தக வீரர்களையும், சில சில்லரைகளுக்காக அலையும் வால்களையும், பொருளாதார உதவியை எதிர்பார்த்தும், பதிவிகளை எதிர்பார்த்தும் அரசியல்வாதிகளை புகழ்பாடிக்கொண்டிருக்கும் மார்க்கத்தைக் கற்ற, உலமா என்று அழைக்கவே தகுதி இல்லாத மொளலவிகளையும், சொந்த இலாபங்களுக்காக இப்படிப்பட்ட அயோக்கியன்களை புகழ்பாடிக் கொண்டிருக்கும் அரச பதவி வகிக்கும், மானம், சூடு சுரணை இல்லாத சமூக சிந்தனை இல்லாத அரச பதவி வகிக்கும் சில அதிகாரிகளையும் தான் குற்றம் சொல்ல வேண்டும்.

    சகோதரர் காரியப்பர் அவர்களே, சமூகத்திற்கு தலைமைதாங்க வேண்டிய பொறுப்பும், கடமையும், தகுதியும் உலமாக்களுக்கு மாத்திரமே உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. உலமாக்களையே நபியவர்கள் “உலமாக்கள் நபிமாரின் வாரிசு ” எனக்குறிப்பிட்டார்கள். இன்று சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் தலையாய காரணமாக இருப்பது நபிமார்களின் வாரிசுகள் தங்களின் கடமையை செய்ய தவறியதாகும். நபியவர்கள் போதனை செய்தார்கள், ஆட்சி நடத்தினார்கள், தீர்ப்பு வழங்கினார்கள், சமூகத்தின் அனைத்து விடயங்களையும் கண்காணிப்பவராகவும், அக்கால சமூகத்திற்கு முன்மாதிரிமிக்கவராகவும், சமூகத்தை வழிநடாத்தக்கூடியவராகவும், சிறந்த தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

    ReplyDelete
  5. ஆனால் இன்று நபிமார்களின் வாரிசுகள் மேற்குறிப்பிட்ட நபியவர்களின் செயல்களில் தங்களுக்கு சாதகமாதை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளனர். மிகக் கூடுதலான உலமாக்கள் போதகர்களாகவும், சமூகம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் தணவந்தர்களின் ஜகாத்தையும், சதகாக்களையும் வடிகட்டி எடுத்து மத்ரசா கட்டிடங்களில் கொட்டிக்கொண்டும், தங்களின் வாழ்க்கைக்கான நிலையான வருமானத்தை உறுதிப்படுத்துவதிலுமே மும்முரமாக உள்ளனர். அத்தோடு சிறந்த போதகர்களாகவும் உள்ளனர். நபியவர்கள் போன்று சமூகத்தை நிர்வகிக்க தவறிவிட்டனர். சட்டங்களை சமூகத்தில் அமுல்படுத்த தவறிவிட்டனர். வாரிசு என்றால் இப்படியா நடந்து கொள்வார்கள்.

    மத்ரசாக்களைக்கூட சிறப்பாக செய்யவில்லை. இன்று இலங்கையில் 300 மேற்பட்ட மத்ரசாக்கள் இயங்குகின்றது. இதில் ஒன்றாவது சர்வதேச பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா. இத்தனை மத்ரசாக்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சி கலாசாலை ஏன் இதுவரையில் இல்லை. உங்களின் மத்ரசாக்களில் கல்வி கற்று வெளியேறும் மாணவர்கள் மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தை எவ்வாறு எத்தி வைக்க வேண்டும் என்ற கல்வி கற்பிக்கப்படுகின்றதா. மாற்று மதக் கொள்கைகளை பற்றி அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றதா. மத்ரசாக்கல்வியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு எவ்வாறு புதிய தொழில்களை உருவாக்க முடியும் என்பது பற்றி சிந்தித்ததுன்டா. இது ஒன்றுமே கிடையாது. மிகக் கூடுதலான மத்ரசாக்கள் அதற்குரிய நோக்கத்துடன் நடாத்தப்படாமல் ஒரு வருமான நோக்கத்திற்காகவே நடாத்தப்படுகின்றது என்பதைத்தான் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

    நபிமாரின் வாரிசுகளால் இன்று சமூகத்தில் நீண்ட காலமாக காணப்படும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை. அதில் மிக முக்கியமானதொன்றுதான் பெண்கள் வெளிநாடு செல்வதாகும். நபிமார்களின் வாரிசுகளே போதகர்களாகவும், மத்ரசா நடாத்துபவர்களாகவும் மட்டுமில்லாமல், சமூகத்தை நிர்வகிக்க முன்வாருங்கள். முஸ்லிம் கலாச்சார திணைக்கழத்துடன் இணைந்தும், பள்ளிவாயல்களுடன் இணைந்தும் எத்தனை அழகாக முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்த முடியும். இன்ஷா அல்லாஹ், இலங்கை முஸ்லிம் சமூகம், தங்களது கடைமைகளை செய்யத்தவறிய இந்த நபிமார்களின் வாரிசை நிச்சயமாக மறுமையில் இறைவனின் தர்பாரில் கேள்விகேட்கும். கழுத்தில் எட்டிப் பிடிக்கும்.

    இங்கு நபிமார்களின் வாரிசுகள் பற்றி இவ்வாறு ஒரு நீன்ட விழக்கம் எழுதக் காரணம், அவர்களால் மட்டுமே இலங்கை முஸ்லிம்களின் அனைத்து வகை பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதாகும். அரசியல்வாதிகளுக்கும் சமூகத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டிய பாரிய பொறுப்புக்களும், கடமைகளும் இருந்தாலும், அவ்வாறான தகமைகளைக் கொண்ட, சுயநலமற்ற, சமூக சிந்தனை கொண்டவர்களை பெறாதது நமது துரதிஷ்டமாகும். இனிமேலாவது யாரும் பொய்வாக்குறுதிகளை அள்ளி வீசும், பொய் அறிக்கைகளை வெளியிட்டு சமூகத்திற்கு தாலாட்டுப்பாடும், இஸ்லாத்தில் மிகப்பெரும் பாவங்களான பொய்களை சொல்லிக்கொண்டும், அரச பணத்தை களவாடிக்கொண்டிருக்கும் அயோக்கியன்களை திட்டாமலும், குறை சொல்லாமலும், மேற்குறிப்பிட்டவாறு யார் இதற்கு கடமைப்பட்டும், தகுதியும் கொண்டுள்ளனரோ அவர்களை நாம் அனுக வேண்டும்.

    ReplyDelete
  6. குறுக்குத்தெருவிடம் ஒரு கேள்வி!?
    அஇஜு வை மனதில் கொண்டா சொல்றீங்க?

    ReplyDelete

Powered by Blogger.