Header Ads



நாம் இலங்கையர் என்று, பெருமையுடன் கூறி கொள்வதற்கு விரும்புகின்றோம் - சம்பந்தன்

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா இன்று -15- அலரிமாளிகையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.  

அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லை. 

இது புனித பயணமாகும். இந்த பயணத்தில் அவர்கள் இருவரும் வெற்றிகாண வேண்டும். 

இவ்வருட திபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் நடைபெறும் என இவ்வடத்தில் நான் கூற விரும்புகின்றேன். 

பிளவுப்படாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமஉரிமையுடன் வாழும் வகையில் அந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வாறான அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலமாக நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக வாழ முடியும். அத்துடன் நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறி கொள்வதற்கு நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் அதனை விரும்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. உங்கள் கருத்துக்களை சுங்கள இனவாத மீடியாக்கள் திரித்துக்கூறாமலா இருக்கும்!
    எது எப்படி இருப்பினும் நீங்கள் சர்வதேஷ அழுத்தம் மூலம் திணிக்க நிணைப்பது உள்ளே புளு மறைந்திருக்கும் அழகான மாம்பழம்! உண்ண முடியாது வீச வேண்டி வரும்!

    ReplyDelete
    Replies
    1. @த.ஓவியம் பார்பவரே,
      இதில் புதுசா என்ன சந்தேகம்?. ஜெனிவாவில் இருக்கும் இலங்கையின் மெயின் சுவிச்சை இடக்கிட அமர்துவதால் தானே இங்கு நல்ல மாற்றங்கள் தெரிகின்றது.

      "பயிர்களுடன் வளரும் புல்லுகளுக்கும் நீர் கிடைப்பது" போல, இந்த மெயின் சுவிச்சினால் முஸ்லிம்களுக்கும் நன்மையே. அதனால் தான் ஞான சேர வும் கட்டாய லீவில் தற்போது இருக்குன்றார்.

      Delete
    2. ராசா கண்ண முழிச்சிட்டயளா! பகலா? இரவா? மீண்டும் கண்ண கசக்கிட்டு தூங்குங்க. இன்னும் ஒரு கனவு காணலாம்.

      Delete
  2. சம்பந்தர் ஐயா,

    யாழ்ப்பாணத்தில் நீங்கள் சொல்வது, ஈழத்தமிழர்.

    கொழும்பில் இருந்தால், இலங்கையர்.

    தமிழ்நாட்டிற்குச் சென்றால், தொப்புள்கொடித்தமிழர்.

    டில்லிக்குச் சென்றால், இந்துத் தமிழர்.

    ReplyDelete
  3. @ 30/10/2017
    புதிய யாப்பா அல்லது ஆப்பா
    பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

    ReplyDelete

Powered by Blogger.