Header Ads



என்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - டக்ளஸ்

தன்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடச் சென்றிருந்த போது டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று -30- பத்தரை வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த போதே டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

தமது நிலைப்பாட்டை வழக்கு விசாரணை நடைபெற்ற போதே தெரிவித்ததாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 16 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.