Header Ads



“அரசியலமைப்பு தயாராகிவிட்டது” - தேரர் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல்

புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர்.

“புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பைத் தயார் செய்த இரண்டு பேரின் பெயர்களும் எனக்குத் தெரியவந்துள்ளது. அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வெகு விரைவில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்களை தவறான வழியில் அழைத்துச் சென்று புதிய அரசியலமைப்பை உறுதிசெய்யும் முனைப்பிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள தேரர், அரசியலமைப்பை எதிர்க்கும் மதத் தலைவர்களை அவமானப்படுத்தும் சதித் திட்டம் ஒன்றும் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

8 comments:

  1. இது இனவாதிகள், பொறாமை, பழிவாங்கும் உணர்வு கொண்டவர்களுக்கு மட்டுமே அதிர்ச்சி தகவல்.

    அமைதியை விரும்பும் இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்ல தகவல்.

    ReplyDelete
  2. இது பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி. இலங்கை நாட்டை நேசிக்கும் இலங்கையர்களுக்கு இது அபாயகரமானது. அசுகிறிய தேரர்களே கிழக்கிற்கு வாருங்கள் பிரிவினைவாதிகளுக்கு எதிராக போராட கிழக்கிலிருந்து ஆரம்பிப்போம். முஸ்லிம்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. Don't think for short purpose, it's not gonna help your community in anyways.

      Delete
    2. இது தேவை அற்ற கருத்து தமிழர்களுக்கு உரிமை வழங்கும் விடயத்தில் எனய சமுதாயம் பதிப்படைவிடின் ok

      Delete
  3. இதில் அதிர்ச்சியுமில்லை ஆச்சரியமுமில்லை. ஒருதரப்பு அரசியலமைப்பை தயாரிக்கின்றனர். மற்றொரு தரப்பு எதிர்க்கின்றனர். ஆனால் வடக்கும் கிழக்கும் வழக்கம் போல் பிரிந்து இருப்பதை உறுதிசெய்தால் போதும். அதன்பின் பேய் ஆண்டால் என்ன பிசாசு ஆண்டால் என்ன. காலங்காலமாக முஸ்லிம்களின் இருப்புக்கு உலைவைக்கும் பாசிச புலிகளின் சிந்தனையாளர்களுக்கு இடைஞ்சலாக தடையாக இருப்பது ஒவ்வொரு இலங்கையருக்கும் கடமையாகும்.

    ReplyDelete
  4. No need to merge north and south.This totally wrong. Tamil people don't understand our culture. They have done mistake in 1990. Let them to keep north

    ReplyDelete

Powered by Blogger.