Header Ads



வாழ்க்கையையே இழந்து கல்வி பெறுவது வேதனைக்கும், விசனத்திற்குமுரியது..!!

-Shameela Yoosuf Ali-

கட்டற்ற காற்றாய் கடிவாளமற்ற குதிரைகளாய் ஓடித்திரியும் குழந்தைகளுக்கு கால்விலங்கு தான் இந்தப்பரீட்சை.

இரவு பகலாய் குழந்தையை விழிக்கச் செய்வதாகட்டும்;ஒரு ட்யூசனிலிருந்து இன்னொரு ட்யூசனுக்கு அழைத்துச் செல்வதாகட்டும் இந்தப் பரீட்சையில் முதலில் சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் பெற்றோர்கள்.

குழந்தையின் மதிய சிறுதூக்கம் கலைத்து ஹோம் வேர்க்.

மாலை நேரம் அக்கம் பக்கத்தில் சேரும் குட்டிக் குழு விளையாட்டுக்களிலிருந்து விலக்கு.

உறவினர் நண்பர்கள் வீடு விசேடம் சத்தியமாய் இல்லை.

குர்ஆன் மத்ரஸா பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதோ படிப்பே முக்கியம்.

எப்போதாவது கூட கார்டூன் பார்க்கக் கூடாது,

சித்திரம் வரைதலென்ற பெயரில் கிறுக்குதல் அநாவசியம்.

குழந்தைகளை விட தாய்மார்கள் இந்தப் பரீட்சைக்காக தங்களைப் பரீட்சைக்குட்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வளவும் செய்தும் சில பிள்ளைகள் சித்தியடைகிறார்கள்; பலர் பெயிலாகி விடுகிறார்கள்.

பாஸான குழந்தைகளை வைத்து ‘எப்படி படித்தார்கள்’ என்ற நேர்காணல் வேறு.

குழந்தையின் நுண்ணறிவையோ,திறமைகளையோ ஏனைய திறன்களையோ முழுமையாக அறிந்து கொள்வதற்கு இந்தப் பரீட்சை எந்த வகையில் அளவீடாகாது.

கல்வி வாழ்க்கைக்கானது. வாழ்க்கையையே இழந்து கல்வி பெறுவது வேதனைக்கும் விசனத்திற்குமுரியது.

குழந்தைப்பருவம் வாழ்க்கையின் அதியற்புதமான வசந்த காலம்.

காடுகளிலும் ஓடைக்கரைகளிலும் மீன்களோடும் பாடும் புள்ளினங்களோடும் குதூகலிக்க வேண்டிய உன்னதமான பருவம்.

அந்தக் காலத்தை வேதனை மிகுந்த பரீட்சைச் சிறைக்குள் வானம் பார்க்காமல் கடத்துவதென்பது வருத்ததிற்குரியது.

சென்றால் திரும்ப வராததொன்று குழந்தைப்பருவம்

3 comments:

  1. இந்த scholarship பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை விட சித்தி பெறாத மாணவர்களே நல்ல நிலையில் உள்ளனர். ... as a whole this examination is useless and it stresses children unnecessarily. ..

    ReplyDelete
  2. Some exam is better than no exam. It's better for them to get trained.

    ReplyDelete
  3. I sat for this scholarship exam almost three decades ago & passed the examination, alhamdulillah. During our time we didnt have this much pressures on students. However, we had to attend the extra classes. We were not allowed to view the evening volleyball games in our village(,the game was more popular than cricket), which was the entertainment for us since Televisions were not common at that time. My parents & class teacher supported me tremendously without any 'must pass' pressure.

    ReplyDelete

Powered by Blogger.