Header Ads



ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்கவே, முன்கூட்டி தேர்­தலை நடத்தினேன் - மஹிந்த

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தற்கு தனக்கு போது­மான கால அவ­காசம் இருக்­க­வில்­லை­யென்றும் அதை ஒழிக்கும் முக­மா­கவே தனது இரண்­டா­வது பதவிக்காலம் முடி­வ­டை­வ­தற்கு இரு வரு­டங்கள் மீதி­யாக இருந்த நிலையில், முன்­கூட்­டியே ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­தி­ய­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கூறி­னார்.

பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலமும் மக்­களின் ஆணையும் இருந்த போதிலும், நீதி­யான சமு­தா­யத்­துக்­கான தேசிய இயக்கம் கேட்­டுக்­கொண்­டதன் பிர­காரம் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஏன் ஒழிக்­க­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷவிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போது அதற்கு பதி­ல­ளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிக்­கப்­போ­வ­தாக வாக்­கு­றுதி அளித்து தேர்­தலில் வெற்­றி­பெற்­ற­வர்கள் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக பத­வியில் இருக்­கின்ற போதிலும் கூட, அந்த ஆட்சி முறையை ஒழிக்­க­வில்லை” என்றும் குறிப்­பிட்டார்.


6 comments:

  1. மற்ற அனைவரும் பொய்யையும் புரட்டையும் மக்கள் மத்தியில் பரப்பும் போது இந்த மாபெரும் தலைவர் மாத்திரம் உண்மையையும் சத்தியத்தையும் மக்களுக்கு எத்திவைக்கின்றார். இந்த சமூகத்துக்குப் புரியுமா என்ன?

    ReplyDelete
  2. I wish the Executive Presidency should remain...because if the executive power delegated to Legislature, it would be like handing over the control from one person (either good or bad person) to majority of MP's who jump sides for their own benefits.

    ReplyDelete
  3. இவ்வருட sorry இந்நூற்றாண்டின் பிரபலமான joke இதுவாகத்தான் இருக்கும். இதனை மகிந்தவின் இந்த photo வே உறுதிசெய்கிறது.

    ReplyDelete
  4. இவருக்கு புத்தி சுவாதீனம் அல்லது இலங்கை மக்கள் அனைவரும் முட்டால்கள் என்று நினைக்கிறார் போலும். இவர் தான் 18 வது திருத்தச்சட்டம் மூலம் வாழ் நாள் முழுக்க ஜனாதிபதியாக இருக்க முயற்சி செய்தவர் தற்போது இவ்வாறு சொல்கிறார்

    ReplyDelete
  5. நிரைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிந்ததோ இல்லையோ நீங்க ஒழிந்தீங்க.

    ReplyDelete
  6. எங்கட ஜோக்கர் மாமா

    ReplyDelete

Powered by Blogger.