October 07, 2017

முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடம் இருக்கிறது

இந்த நாட்டில் சிங்கள, தமிழ் வாத பிரச்சினை என்பது உலகம் அழியும் வரையுள்ள பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும் வடகிழக்கை இணைத்து என்னதான் அதிகாரம் கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது.. காரணம் அவர்களுக்கு இந்த நாடுவேண்டும்.. தமிழர்த்தாயகமாக தனிநாடு வேண்டும் என்பதே தமிழர்களின் இறுதி இலக்காகும்.

மொழியாலும் மதத்தாலும் பலகோடி தமிழர்கள் உலக நாடுகளில் வாழும் எந்த நாடும் அவர்களுக்கு உரித்தானதல்ல...அவர்களும் அந்தநாட்டுகளில் வாழும் மக்களே தவிர அவர்களுக்கான சொந்த நாடுகள் அல்ல அதனால்தான் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதும் கூட அவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை..

தமிழர்களின் சாத்வீக போராட்டத்தில் தொடங்கி ஆயுதப்போராட்டம் வரை முஸ்லிம்களை மொழியால் தமிழர்கள் என்று ஏற்றவர்கள் பிற்பாடு இணத்தால் பிரித்து துப்பாக்கியை முஸ்லிம்கள் பக்கம் திருப்பினார்கள். வடக்கில் இருந்து அன்று பலவந்தமாக வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களை யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரும் கூட வடமாகாணத்திற்கு திரும்புவதை தமிழர்கள் விரும்பவில்லை அவர்களுடைய நோக்கம்  இலங்கையில் முஸ்லிம்களுடைய  ஜனப்பரம்பலை குறைத்து அவர்களுக்கான  தனியலகு வேலியிட்டுவிட்டு மீண்டும் சிங்களவர்களோடு தமிழர்கள் அதிகார யுத்தம் செய்து நாட்டைப்பிடிப்பதையே அவர்களின் அடுத்த கட்ட குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்..

இதற்காகத்தான் வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மதவாத குழுக்கள் இலங்கையில் அண்மையில் கூட ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சிங்கள பௌத்த வாத கொள்கையில் இருக்கும் சிலரை தந்திரோபாயமாக கையாண்டு அன்றுதொட்டு இன்றுவரை பௌத்த கடும்போக்குவாதிகளான அநாகரீக தர்மபால தொடக்கம் ஆனந்த தேரர் இப்போது ஞானசார தேரர் வரை இவர்களுடைய பின்னனியில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை காலத்திற்கு காலம் தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுடைய ஊடுருவல் இந்தியாவினுடைய தலையீட்டுடன் எப்போது மாகாண அதிகாரங்கள் இந்தநாட்டில் பலவந்தமாக பரிந்துரைக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே சிங்கள தலைவர்கள் முஸ்லிம்களுடனான உறவின் தேவையை உணர்ந்தார்கள்.
பிற்காலத்தில் முஸ்லிம்களை தங்களுடைய ஆட்சியின் பங்காளியாகவும் ஏற்றுக்கொண்டார்கள்..

இப்போது தமிழர்களுடைய வெளிநாட்டுகளுடனான உறவு வலுபெற்றுவிட்டது. இப்போது இரண்டு தேசிய கட்சிகளை மோதவிட்டு ஜனநாயகத்திற்கு சாவுமணியடித்து நல்லாட்சியை கொண்டுவந்து இந்த நாட்டை பிளவுபடுத்தும் இறுதிபடிக்கட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் தலைமைகளையும் விலைபேசி முடித்திருக்கிறார்கள் என்பது அரச தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஈ.பி.டி.பியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்லஸ் தேவாநந்தா விடுதலை புலிகள்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ற வாசகத்தை நிறுவி பேசியிருந்தார். எனவே மேற்சொன்னமாதிரி அவர்களுடைய தேவை நிறைவேற்றப்படும் போது சிங்கள தமிழ் அதிகார யுத்தம் மீண்டும் தலைதூக்கி முஸ்லிம்களை சொந்த நாட்டிற்குள் அகதிகளாக்குவது அல்லது வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும் எனவே இதனூடாக முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடம் இருக்கிறது என்பதை சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அஹமட் புர்க்கான் 
கல்முனை

9 கருத்துரைகள்:

Don't divert the mindsets of innocent muslims who always want to live with Tamils peacefully

கட்டுரையாளர் ஒரு இனவாதி. இவருக்கும் டண் பிரசாத் க்கும் என்ன வித்தியாசம்?

சகொதரர் anusath நீங்கள் மேல் கூறியது முற்றிலும் உண்மை ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் திசை திரும்பியவர்கள் அப்படி இல்லை என்றால் அன்று முஸ்லீம்களை 12 மணி நேரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து விரட்டி அடித்து இருக்கமாட்டார்கள் கிழக்கில் அப்பாவி முஸ்லிம்களை வணக்ஸ்த்தலங்கலிலும் வீடுகளிலும் பூந்து கொண்டு குமித்து இருக்கமாட்டார்கள்

ஜீகாத் பயங்கரவாதிகள் செய்தவற்றை நீங்கள் மறந்திருக்கலாம் நாம் மறக்கவில்லை.

ilankai naadaalumantraththil kiliththeriyappatta oppanthangal theekkiraiyyaana oppanthangal romba athikam. antha vakaiyil puthithaaka varavirukkum viraku thaan vadakilakku inaippum puthiya yaappumthaan.2/3 majority ini muslimkalin kaalil vilunthu petrukkondaalum referendom varumpothu sinhala makkalae erithu kulirkaayvaarkal. athuvara iruppom nambikkaiyudan....

Enna seithaargal? Tamilargal Muslims murdered panninathu athihama? or Muslims tamilargalai murdered athijamaa? Pesumpothu innocent Muslims, attack pannumbothu elloru

ஆஹா...
கட்டுரையாளர் இனவாதி......
அப்ப......
இதசொல்பவர்...?
பயங்கர பிணவாதி.

இலங்கையின் வடக்கில் ஒரு துண்டையும் இந்தியாவின் தெற்கில் ஒரு தொங்கலையும் ஆட்சிசெய்த வீராதிவீர நாடற்ற பரம்பரையில் வந்த நீங்கள் குட்டக்குட்ட நாங்கள் பணியவேண்டும் என்பது உமது எதிர்பார்ப்போ?
மேற்கில் ஸ்பெயின் தெற்கில் இந்தியாவரை உலகின் பெரும் நிலப்பரப்பை பலநூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பரம்பரையில் வந்தவர்கள் என்பதை காட்ட ஜிகாதிகள் அன்று சிறு முயற்சியை செய்து அச்சத்தை ஊட்டினார்களோ? இன்னும் இவர் மீளவில்லைபோலும். பாவம்.

Post a Comment