October 24, 2017

மிதவாத இஸ்லாத்தை, நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - முகமத் பின் சல்மான்


-BBC-

மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.

சௌதி அரேபிய தலைநகர் ரியாதில் முதலீட்டாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இளவரசர் முகமத் பின் சல்மான், 1979-ஆம் ஆண்டுக்குப் பின் தங்கள் நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும், தீவிரவாதத்தின் எச்சங்களை தங்கள் நாட்டு அதிகாரிகள் வெகு விரைவில் அழிப்பார்கள் என்றும் கூறினார்.

அழிவுக்கு வழிவகுக்கும் கோட்பாடுகளுடன் அடுத்த 30 ஆண்டுகளை சௌதி அரேபியா செலவிடாது என்றும் கூறினார் முகமத் பின் சல்மான்.

இளவரசர் சல்மான்தான் அங்கு நடைபெறும் பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களுக்குப் பின்புலமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பெண்கள் வாகனம் ஓட்ட நீண்ட காலமாக இருந்த தடை சமீபத்தில்தான் அங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செளதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்படும் புதிய நகரம் மற்றும் பொருளாதார மண்டலத்தில் 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

நியோம் எனப்படும் இந்தத் திட்டம், தொழில்நுட்ப மையத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று செளதி செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

25,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய இந்தத் திட்டம், ஆகாபா வளைகுடா வழியாக ஜோர்டான் மற்றும் எகிப்தை ஒரு பாலம் மூலம் இணைக்கும்.

ரியாதில் நடைபெற்ற எதிர்கால முதலீடு பற்றிய சர்வதேச மாநாட்டில் இதை இளவரசர் முகம்மது பின் சல்மான் அறிவித்தார்.

திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2025ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எண்ணெய் வளத்தையே சார்ந்திருக்கும் செளதி அரேபியாவை, எண்ணெய் வளம் இல்லாத காலத்தில் எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்ற முயற்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இளவரசர் இந்த நகர்வை மேற்கொள்வதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

6 கருத்துரைகள்:

Wahhabism bye bYE Followed by Secularism and both are Extremism

Now..
Salafi groups will do Jihad...to dislodge Salman .
Do or die for salafi groups.
If they support King they will have to give up many of their religious ideas ..
Many rituals ..
But if they do not they will lose money

சரியாக இஸ்லாமும் ஈமானும் இல்லாமல் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஆட்சி கையில் கொடுத்தால் இப்படி தான் தலைகீழாக ஆட்சி நடக்கும்.கியாமத்து நெருங்க நெருங்க நிறைய கல்வியறிவு அற்றவர்களின் ஆட்சி நடக்குமாம் இப்போது அந்த உதாரணத்தை காணலாம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ் ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரக்காத்துஹூ
இஸ்ஸாமிய ஷரீயா சட்டத்தை உலகுக்கு போதிக்க முயட்சிக்கும் உங்களுக்கு தெரியாதா என்ன இஸ்லாம் முழுமையாக்கப்பட்டது என்று?
அது என்ன மிதவாத இஸ்லாம்?
அல்லாஹ்வும் ரசூலுல்லாஹுஹ்வும் எங்களுக்கு போதுமாவார்கள். யா அல்லாஹ் இந்த நயவஞ்சகர்களிடம் இருந்து எங்களையும், எங்கள் சந்ததிகளையும் உன் மகத்தான கிருபையை கொண்டு எங்களை பாதுகாப்பாயாக, ஆமீன்.

Is this starting of the "END OF WAHHABISM" ?

ஆமாம் வஹாபிசம் ஒலிந்தவுடன் கபுவணங்கிகள் கஃபாவில் கபுருசிலைகளை கொண்டுவந்து வைத்து அதை வணங்க ஆரம்பித்துவிடுவார்கள் முகம்மது சல்மான் சவுதியில் பொருளாதரத்தை மேம்படுத்த அந்த நாட்டில் பல இடங்களில் தேவாலயங்களை அமைத்து கொள்ளவும் திட்டம் வகுத்திருப்பார்!

Post a Comment