Header Ads



சிறைச்சாலையை திறந்துவைக்க மறுத்த ஜனாதிபதி

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸவில் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை  மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.

4996 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில் 1500 கைதிகளை அடைத்து வைக்கும் வசதிகள் உள்ளன.

65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில், மருத்துவனை, நீச்சல் தடாகம், விளையாட்டு மைதானம், தொழிற்பயிற்சிக் கூடம், கைத்தொழில் பிரிவு, உடற்பயிற்சிக் கூடம், உணவகம், உணவுக்கூடம், விருந்தினர் அறைகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள், இந்தச் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

180 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்ட தங்காலை சிறையில் தற்போது 1200 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறைச்சாலையை திறந்து வைக்க  மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடப்பட்டது. எனினும் அவர் அந்த அழைப்பை நிராகரித்ததால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.