Header Ads



பெண் ரோபோவுக்கு, குடியுரிமை வழங்கிய சவுதி அரேபியா - உலகளவில் பரபரப்பு (படங்கள்)


சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது.

பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

குறித்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது. 

 சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற இந்த பெண் ரோபோ ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளது. அதில் அது கூறியதாவது:-

"என்னை ஒரு தனித்துவத் தன்மையுடன் சிறப்பாக உருவாக்கியதற்கு பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன். மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் முக்கியத்துவம் வாய்ந்த ரோபோவாக மாறுவேன்" என கூறியுள்ளது.

தற்போது இந்த பெண் ரோபோவின் பேட்டி யூ டியூப் செனலில் வைரலாக பரவி வருகிறது. உலக வரலாற்றில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது. 

லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கும்போது ரோபோவுக்கு குடியுரிமை தேவையா? என சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



7 comments:

  1. உண்மையில் இது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. ...ஆனாலும் விமர்சிக்க முன்பு இது எந்தளவு உண்மை என முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. What is stupidity? What is Yahuthi? and Who Are you Mr? Did you go to School... Study the History properly again.

    ReplyDelete
  3. இஸ்லாமிய கிலாபத்தை மீள நிறுவி முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டிய நம் தலைமைகளின் பரிதாப நிலை....  அந்தோ பரிதாபம்!

    ReplyDelete
  4. What is the benefits to s.arabia? For giving citizenship for robo.

    ReplyDelete
  5. அமெரிக்கன் யார் தலையில் இதைகட்டலாமென இருந்திருப்பான் இழிச்ச வாயன் தலையில கட்டிவிட்டான்.

    ReplyDelete
    Replies
    1. பெண் ரோபோ என்றதால் கொடுத்திருப்பார்கள்.

      Delete

Powered by Blogger.