Header Ads



நீர்கொழும்பு மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா விற்பனை

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த 7,500 மதன மோதக உருண்டைகளுடன் சந்தேகநபரொருவரை நீர்கொழும்பு விஷ போதைப் பொருள் தொடர்பான தேடுதல் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்கு இந்த போதைப்பொருள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 100 மதன மோதக உருண்டைகள் அடங்கிய 75 பொதிகளுடன் 34 வயதான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மதன மோத உருண்டை 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாரத்ன, நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் நீர்கொழும்பு பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார ஹூட்லர் மற்றும் சட்டத்தை அமுலாக்கும் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.பி. ரூபசேன உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.