Header Ads



மஹிந்த அமரவீரவை, படுகொலை செய்ய திட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவை, அரசியல் மற்றும் தனிப்பட்ட வகையில் படுகொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சில குழுக்கள் சில தடவைகள் மேற்கொண்ட சூழ்ச்சிகள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி பிரதியமைச்சராக தாம் பதவியேற்ற தினத்திலிருந்து இதற்கான சூழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை உயர் நிலையில் மதிப்பிட்டுள்ளதால் இந்த சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இரண்டு சிறு கட்சிகளின் இளம் உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு அன்றைய தினத்திற்கு மறுநாள் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் கூடி தம்மைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தை தயாரித்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் இளைய பாராளுமன்ற உறுப்பினரொருவர் “அமைச்சரை இல்லாமலேயே ஒழித்துவிடுவோம்” என யோசனை தெரிவித்தபோது, அந்தக் குழுவிலிருந்த பெரும்பாலானோர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்பதாலேயே இதுவரை தாம் பாதுகாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பி நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு பிணை வழங்குவதற்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்தீர்கள் எனக் கூறப்படுகின்றதே?

இதற்கு பதிலளித்த அமைச்சர், நான் எந்த வகையிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட வேண்டுமென்று நான் கூறவுமில்லை.

அவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது அதற்கு அடிப்படை இருக்க வேண்டும். மத்தள தொடர்பில் பொய் பிரசாரமொன்றை மேற்கொண்டே அவர்கள் மக்களை தூண்டிவிட்டனர். இதனாலேயே அவர்கள் சிறை செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமது படுகொலை சூழ்ச்சி தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர், இக்குழுவிலிருந்து ஒருவர் தமக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனவை பாதிப்புறச் செய்யவேண்டுமென்றால் மஹிந்த அமரவீரவை தாக்க வேண்டுமெனக் கூறியுள்ளமையும் தமது செவிகளுக்கு எட்டியதாக அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.