October 02, 2017

ரோஹின்ய முஸ்லிம்கள் மீது தாக்குதல், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்


கொழும்பில் ரோஹின்ய முஸ்லிம்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று -01- சிலர் கல்­கிசை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது மதுஷான் சென­வி­ரத்ன பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­ட­துடன் ஏனைய அனை­வரும் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் 9 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். இந் நிலையில், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் அனை­வரும் 9 ஆம் திகதி அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இத­னை­விட அடை­யாளம் காணப்­பட்ட மேலும் இரு சந்­தேக நபர்­களை தேடும் பணி­களை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட ரோஹிங்யா அகதிகள் சார்பில் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே மன்றில் ஆஜரானார். அவர் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன் சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களை மட்டும் உள்ளடக்கி குற்றச்சாட்டினை முன்வைத்திருந்த நிலையில், ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் ஏன் முன்வைக்கப்படவில்லை என சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே கேள்வி எழுப்பினார். சந்தேக நபர்களுக்கு எதிராக சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இதன்போது சட்டத்தரணி சிந்தக சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து மன்றில் ஆஜரான சட்டத்தரணி அது தொடர்பில் சட்ட மா அதிபருடன்  கலந்துரையாடி மன்றுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.


குறிப்­பாக ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­க­ளுக்கு எதி­ராக திடீ­ரென முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த அத்­து­மீ­றல்­களின் பின்­னணி தொடர்பில் விசா­ர­ணை­யா­ளர்கள் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இதன்­போது பல்­வேறு அதிர்ச்­சி­கர தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த அக­திகள் மிரி­கான தடுப்பு முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த போது, சுக­யீ­ன­முற்று களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அகதி இளம் பெண் ஒருவர், பாது­காப்பு கட­மையில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.  கங்­கொ­ட­வில நீதிவான் நீதி­மன்றில் இது தொடர்­பி­லான வழக்கு பீ/ 2030 /17 எனும் இலக்­கத்தின் கீழ் நடை­பெற்று வரு­கின்­றது.

இதில் துஷ்­பி­ர­யோகம் செய்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான டி.பி.ஜி. குண­வர்­தன வாசை பாதிக்­கப்­பட்ட யுவதி அடை­யா­ளமும் கண்­டி­ருந்தார். இந் நிலையில், அது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்த பாலியல் துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கையைக் கருத்தில் கொண்டே மிரி­கா­னைக்கு வெளியே ரோஹிங்ய அக­தி­களை தங்­க­வைக்க நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

இந் நிலையில், இந்த பாலியல் துஷ்­பி­ர­யோக சம்­ப­வத்தின் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளாக பாதிக்­கப்­பட்ட யுவ­தியும் அவ­ரது மைத்­து­ன­ரான மொஹம்மட் அமீன் என்­ப­வ­ருமே உள்­ளனர். இந்­நி­லையில் ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை முடி­யு­மான வரை அவ­ச­ர­மாக நாடு கடத்­து­வதன் ஊடாக இந்த வழக்கில் இருந்து தப்பிக் கொள்­ளலாம் எனும் எண்­ணத்தில் அக­தி­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டமும் அத்து மீறலும் நடாத்­தப்­பட்­டுள்­ள­தாக  தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த அத்­து­மீ­றல்­களின் போது, துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் நண்­பர்கள் மற்றும் உற­வி­னர்கள் கலந்­து­கொண்­டமை ஊடாக இந்த தக­வல்கள் மற்றும் சந்­தேகம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கல்கிசையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான அத்துமீறல்கள் சிலரால் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட ஏனையோர் உண்மை நோக்கத்தை அறியாது சட்டவிரோத கும்பலின் உறுப்பினர்களாக செயற்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளனர். எனினும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் உறுதி செய்துகொள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

MFM.Fazeer

3 கருத்துரைகள்:

now the real reason out. this is not racism but criminals using racism to escape from punishment.

It's look like hide one case and bring another case.

Wait nd see....everything
Will be a drama.....

Post a Comment