Header Ads



முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள், இப்போது மோதகம் சாப்பிடுகின்றோம்,

வடமாகாணசபையின் அமைச்சர் சபை மாற்றப்பட்டதன் பின்னரும் மாற்றங்கள் எதனையும் காணவில்லை என வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

முன்பு கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகின்றோம், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை, உருவத்தில் மாற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக இன்று -24- யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாணசபையின் பழைய அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது அமைச்சர் சபை மாற்றியமைக்கப்பட்டது.

அமைச்சர் சபை மாற்றியமைக்கப்பட்டாலும் மாகாணசபையை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மாற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. மாற்றங்கள் மட்டுமல்ல மாற்றங்களுக்கான சமிக்ஞை கூட தெரியவில்லை.

வெளிப்படையாக சொன்னால் முன்னர் கொழுக்கட்டை சாப்பிட்ட நாங்கள் இப்போது மோதகம் சாப்பிடுகிறோம் அவ்வளவே வித்தியாசம். இந்நிலையில் மாகாணசபையின் ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்காக துறைசார் நிபுணர்களை கொண்டு புதிய நியதிச்சட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது ஜனாதிபதியின் செயலாளருடன் பேசியிருந்தேன்.

அப்போது அவர் கூறிய விடயம் ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டால் நீதி துறையில் ஜனாதிபதி தலையிடுகிறார் என செய்தி தென்னிலங்கைக்கு வரும்.

அதன் பின்னால் சிறையில் உள்ள படையினர் மற்றும் பலருக்காகவும் ஜனாதிபதி நீதி துறையில் தலையிட வேண்டும் என தென்னிலங்கையில் அழுத்தங்கள் கொடுக்கப்படும், என அவர் கூறியிருந்தார்.

இதேவேளை சட்டமா அதிபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

காரணம் சட்டத்தில் எதிரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலும். சாட்சிகளுக்கு வழங்க இயலாது. இதற்கமையவே மூதூர் வழக்கு மாற்றப்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பாக என்ன நிலைப்பாடு என்பதை அறியவில்லை.

இதற்கிடையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். எனவே சாதகமான தீர்வு வரும் என நம்பலாம்.

அதேவேளை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் என்னோடு பேசியிருந்தனர். அப்போது அவர்கள் கூறியிருந்த விடயம் தமிழ் அரசியல் கைதிகளை வைத்து வெளியே அரசியல் நடத்துகிறார்கள் எனவும், தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கும்படியும் எனவே அதனை நாங்கள் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. இதில் வேறு இந்த சோத்து மாடுகளுக்கு கிழக்கையும் இணைத்துக்கொடுக்கணுமாம்

    ReplyDelete
  2. அப்போ கொழுக்கட்டை தந்தால் இணைக்க ok யா?

    Gtx சாருக்கு ஒரு கொழுக்கட்டை பார்சல் கட்டு.

    ReplyDelete
  3. தமிழர்களுக்கே கொழுக்கட்டையும் வேண்டாம் மோதகமும் வேண்டாம் என்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதற்கும் மிஸ்டர் அந்தோணி?

    ReplyDelete

Powered by Blogger.