Header Ads



சிரியாவில் களமிறக்கப்பட்டுள்ள, ரஷ்ய கூலிப்படைகள் செய்யும் அக்கிரமங்கள்

சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக போரிட்டு வரும் ரஷ்ய கூலிப்படைகள் அங்குள்ள இளம்பெண்களை 75 பவுண்ஸ் தொகைக்கு வாங்கி பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட  ஆட்சியிலிருக்கும் ஆசாத் அரசு ரஷ்ய கூலிப்படைகளை களமிறக்கியுள்ளது. குறித்த கூலிப்படைகள் உயிருடன் பிடிக்கப்படும் கிளர்ச்சியாளர்களை தலை துண்டித்து படுகொலை செய்வதற்கு தலா 13 பவுண்ட்ஸ்களை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமன்றி அங்குள்ள இளம்பெண்களை ஆண்டுக்கு 75 பவுண்ட்ஸ்களுக்கு பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சிரியாவில் கூலிப்படைகளை களமிறக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமான ரஷ்ய ராணுவத்தினரே போரிட்டு வருவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. 

குறித்த கூலிப்படைகளில் உள்ள உறுப்பினர்கள் இருவர் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியதன் பின்னரே இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிக்கப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே முன்னாள் ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் குறித்த விவகாரம் தொடர்பில் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய கூலிப்படைகள் சிறிய இளம்பெண்களை தலா 1500 பவுண்ட்ஸ்களுக்கும்,  ஆண்டுக்கு சுமார் 75 பவுண்ட்ஸ்களுக்கும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

சட்டத்திற்கு புறம்பாக மாத ஊதியத்திற்காக போரிட்டுவரும் இதுபோன்ற கூலிப்படைகள் அதிகாரப்பூர்வ ராணுவத்தினர் போன்று கேளீக்கைகளில் ஈடுபட முடியாது என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான அதிகாரிகள் இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை விலைக்கு வாங்கியுள்ளதையும் அந்த ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ளார்.

கூலிப்படையாக செல்லும் வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்பத்திற்கு 39,000 பவுண்ட்ஸ்  வழங்கப்படுவதாகவும், படுகாயமுற்றால் 11,700 பவுண்ட்ஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய கூலிப்படைகளை அந்த நாட்டு அரசு சிரியாவில் மட்டுமல்ல, உக்ரேன் மற்றும் கிரிமியா பகுதிகளிலும் களமிறக்கி போரிட வைக்கின்றது.

இவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுதங்களுக்காக ரஷ்ய ராணுவ நிதியில் இருந்தே மறைமுகமாக அளிக்கப்படுவதாக தகவல் உள்ளது.

5 comments:

  1. ரஷ்ய தீவிரவாதிகள்

    ReplyDelete
  2. ரஷ்யாவை குற்றம்காணவேண்டிய அவசியமில்லை. இதற்கு அனுமதியளித்த அஸாத் அனைத்துப்பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்வான்.
    பிர்அவ்னுக்கு என்ன நடந்தது என்பதை இவன் இன்னுமா அறியவில்லை.

    ReplyDelete
  3. @VoicePakistan, Both USA & Russia are against your ISIS.

    ReplyDelete
    Replies
    1. LTTE - Ajan my pleasure. add me in that Isis haters list.

      Delete
  4. இப்படிப்பட்ட லட்சோபலட்சம் அனியாயங்களை கலம் நெடுகிலும் சியாக்கள், சுன்னாக்கள் எண்ற ஒரேயொரு காறணத்திற்காக செய்துவந்ததால்தான் ஐ.எஸ் ஜிகாதிகள் போரை தொடங்கி பழிதீர்த்தனர். இஸ்லாமிய தேசத்தை ஆட்சேபிக்கும் அனைத்து மூடர்களுக்கும் இந்த செய்தி மகிழ்சியையா தருகிறது?

    ReplyDelete

Powered by Blogger.