Header Ads



"விமல் வீரவங்ச, பட்டாசுகூட வெடிக்கத் தெரியாத பயந்தாங்கொள்ளி"

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பட்டாசு கூட வெடிக்கத் தெரியாத பயந்தாங்கொள்ளி என்று அமைச்சர் சரத் பொன்சேகா கிண்டலடித்துள்ளார்.

ஶ்ரீகொத்தாவில் தேசிய தொழிலாளர் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

புதிய அரசியல் அமைப்பொன்றை நிறைவேற்றினால் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று விமல் வீரவங்ச கொந்தளித்துள்ளார்.

அவரது தாய்க்கட்சியான ஜே.வி.பி.யில் ஒருகாலத்தில் துணிச்சலான ஒருசிலர் இருக்கவே செய்தார்கள். ஆனால் அவர்களைப் போன்ற தைரியம் விமலுக்குக்கிடையாது. அவர் பட்டாசு வெடிக்கவே பயப்படும் பயந்தாங்கொள்ளி.

அதே போன்று புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வேண்டும் என்றும் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருசிலர் கொக்கரிக்கின்றனர்.

அவ்வாறானவர்கள் அடுத்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முன்னர் தங்கள் மீதும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படலாம் என்பதை புரிந்து கொள்வது நன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. எல்லோரும் சண்டியா்களாக செயற்பட்டார்கள்.

ஆனால், அந்த நிலை தற்போது மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கான முறையில் அமுல்படுத்தப்படுகின்றது.

அதன் காரணமாக எந்தவொரு நபருக்கும் காட்டுத் தர்பார் நடத்தமுடியாது என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பட்டாசு கூட வெடிக்கத்தெரியாத பயாந்தாங் கொள்ளியின் தீவிர ஆதாரவாளர்களான Gtx, Lafir களும் அப்படியே தான்.

    ReplyDelete
    Replies
    1. அந்தோனி !
      நீர் சொல்லும் விமல் மற்றும் பயந்தான்கொள்ளி என்ற பட்டியலில் தேவைப்படின் பள்ளிகளில் தொழுதுகொண்டிருந்த நிராயுதபானிகளையும் தூக்கத்தில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் சுட்டும் வெட்டியும் கொலைவெறியாடிவிட்டு, இலங்கை இராணுவத்திற்கு முன்னால் சரணாகதி அடைந்த பாசிச புலிகளை அப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்.

      Delete
    2. Niraayudapaanikalai Kolai seivathu ponnaththanam

      Delete
  2. There are jokers in the parliament and frequently they crack jokes. Some parliamentarians keep their constituents happy through their public services while some others keep their constituents happy by cracking jokes.

    Therefore I leave it for you all to categorise them.

    ReplyDelete

Powered by Blogger.