Header Ads



பல பகுதிகளில் வெள்ள அபாயம், அவதானமாக இருக்க கோரிக்கை

நில்வலா கங்கையை அண்மித்துள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பபெருக்கு அவதானம் ஏற்பட்டுள்ளது.

இதனுடன் இரத்தினபுரி, பாலிந்தநுவர, புளத்சிங்கள, ஹொரணை, பத்தேகம மற்றும் தவலம பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அவதானம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் மத்திய மலைநாட்டிலும் அதிக மழைக் காரணமாக கலுல கங்கை மற்றும் நில்வலா கங்கையின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

களனி கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நெலுவ மற்றும் எஹலியகொட பிரதேச செயலங்களில் மலைப் பகுதியில் வாழும் மக்கள் அங்கிருந்து செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு எச்சரிக்ககை விடுத்துள்ளது.

இன்று அதிகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி இரத்தினபுரி – நிவிதிகலயில் பதிவாகியுள்ளது.

அங்கு 123.0 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் குக்குலே கங்கை பகுதியிலும் காலி – மொரலிஓயா பிரதேசங்களிலும் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

களுகங்கை நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் குக்குலே கங்கையின் வான் கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளது.

களுகங்கையின் கிளை கங்கையான மகுரு கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பதுரலிய – கலவானை வீதியில் மிதலன பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதனிடையே எஹலியகொட பிரதேசத்தில் பெய்த அதிக மழையால் அப்பகுதியில் தாழ்நில பகுதிகள் சில நீரில் மூழ்கியுள்ளன.

இதனிடையே இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி கஹவத்தை மற்றும் பெல்மடுலை ஆகிய பிரதேச செயல பிரிவுகள் மற்றும் நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பகுதியிலும் மண் சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.