Header Ads



தாஜ்மஹாலின் பெயரை மாற்றுமாறு, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை

பழமைவாய்ந்த சிவன்கோவிலே தாஜ்மஹாலாக மாற்றப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கட்டியார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாஜ்மஹாலாக இருக்கும் இடத்தில் 'தேஜோ மஹால்' என்று கூறப்படும் பழங்கால சிவன் கோவில் இருந்ததாகவும், தற்போது அந்த இடத்தில் தான் தாஜ்மஹால் இருப்பதாகவும் வினய் கட்டியார் கூறியுள்ளார்.

தாஜ்மஹாலின் உள்ளே இந்துக் கடவுள்களின் சிலைகள், இருந்ததற்கான பல குறியீடுகள் இருப்பதாகவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹாலுக்குச் சென்று அதில் இருக்கும் இந்துக் குறியீடுகளைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தாஜ்மஹால் ஒரு கல்லறை என்றால், அதில் அறைகள் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ள வினய்கட்டியார், இருப்பினும் எந்தக் கட்டடத்தையும் இடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த கட்டிடத்தின் பெயரை தேஜோ மஹால் என்று மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

3 comments:

  1. இஸ்லாத்திற்கும் தாஜ்மகாலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இவர்களின் பிரட்சினை இஸ்லாமியர் அதை உருவாக்கியதுதான்.

    ReplyDelete
  2. இது ஒரு சொரி நாய் கூட்டம் புதுசு புதுசு எதையாவது சொல்லிக்கொண்டுதான் இனுக்கும்.

    ReplyDelete
  3. இஸ்லாத்திற்கும் தாஜ்மஹாலுக்குமுள்ள தொடர்பு அதனைக் கட்டியவர் தொடர்பில் மட்டுமே. இஸ்லாமிய இலச்சினையோ வழிபாட்டுத்தலமோ அல்ல. மாறாக இந்தியாவுக்கும் அதன் வரலாற்றுக்கும் ஏன் பொருளாதாரத்துக்கும் மிகமிகப் பெரிய பங்களிப்பினை வழங்கிவரும் ஆதாரமுமாகும்.
    கட்டுக்கதைகள் , இதிகாச புராணங்கள் மற்றும் குறுமன சாமிகளின் பித்தலாட்டங்களையும் இறைவேதமாக கடைப்பிடிக்கும் சில காவிச் சிந்தனையாளர்களுக்கு தாஜ்மஹாலின் இருப்பு இமயமலைப் பாரமாகத்தான் இருக்கும்.
    இதனால் இதயத்திலிருந்து இதனை இறக்குவதற்கு வழிதெரியாதபோது மூளையழற்சி ஏற்பட்டு உளறுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.
    காவிகளே அழிப்பது ஒன்றும் கடினமல்ல. ஒன்றை நீங்களாக ஆக்கிப்பாருங்கள் அதன் கனதி புரியும்.
    ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை தாஜ்மஹாலை சுற்றி நடைபெறும் அநாச்சாரங்களின் அடிப்படையில் அது அழிந்தால் என்ன? நட்டம் இந்தியாவுக்கும் அதன் குடிமக்களுக்குமேயாகும.

    ReplyDelete

Powered by Blogger.