Header Ads



கொழும்பிலுள்ள உணவகங்கள் குறித்து எச்சரிக்கை

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் செயற்படும் உணவகங்கள் குறித்து அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

மனித சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் பல உணவகங்கள் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறான உணவகங்களை அடையாளம் காணும் நடவடிக்கையை கொழும்பு மாநகர சபை முன்னெடுத்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் உணவகங்களில் திடீர் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது உணவு பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

உணவகங்களின் சமையலறைகள், உணவு சேர்மானப்பொருட்கள, உணவைக் களஞ்சியப்படுத்தும் பகுதிகள் என்பனவும் சோதனையிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளின் மாதிரிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சோதனைக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

அசுத்தமான முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் உணவகங்கள் உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.

பிற நகரங்களிலிருந்து நாளாந்தம் பெருமளவு மக்கள் தலைநகர் கொழும்பை நோக்கி பயணம் செய்கின்றனர். இதன்போது உணவகங்களிலேயே உணவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

இது குறித்து தூர இடங்களிலிருந்து வருகை தரும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.