Header Ads



வீட்டின் கூரையைப் பிரித்துஇ தந்தையின் பணத்தை திருடிய மகன் - காட்டிக்கொடுத்த பொலிஸ் நாய்

தனது தந்­தைக்குச் சொந்­த­மான இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தி­னா­யிரம் ரூபா பணத்தைத் திரு­டிய பாட­சாலை மாணவன் ஒரு­வனை திரு­டிய பணத்­தில ஒரு இலட்­சத்து எட்­டா­யிரம் ரூபா பணத்­துடன் நொச்­சி­யா­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

நொச்­சி­யா­கம ஹல்­மில்­ல­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது வீட்டை உடைத்து இரண்­டரை இலட்ச ரூபா திரு­டப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

தாம் உறங்கும்­போது கால்­க­ளுக்கு வைக்கும் தலை­ய­ணைக்கு அடியில் பணத்தை வைத்­தி­ருப்­ப­தா­கவும், வீட்டின் ஓட்டைப் பிரித்து இப்­பணம் திரு­டப்­பட்­டுள்­ள­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பணம் குறித்து வீட்­டி­லுள்ள எவரும் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இக் குடும்­பத்தில் கணவன், மனைவி, மகன், மகள் ஆகியோர் வசிக்­கின்­றனர். மனைவி மற்றும் மகளும் தொழி­லுக்குச் செல்­கின்­றனர். சம்­பவ தினம் அதி­காலை கணவன் வர்த்­த­கத்­துக்­காக வெளியே சென்­றுள்ளார். மனைவி வீட்டை பூட்­டி­விட்டு வழ­மை­போல திறப்பை ஒரு இடத்தில் மறைத்து வைத்­து­விட்டு தொழி­லுக்குச் சென்­றுள்ளார்.

அன்று நேரத்­துடன் வீடு திரும்­பிய தந்தை வீட்டைத் திறந்­த­போது தமது அறையின் ஓடு பிரிக்­கப்­பட்­டுள்­ளதைப் பார்த்து தலை­ய­ணைக்குள் வைத்­தி­ருந்த பணத்தைப் பார்த்­த­போது அது கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருந்­தமை தெரி­ய­வந்­துள்­ளது.

பொலிஸார் “ஹீரோ” என்ற மோப்ப நாயுடன் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். நாயைக் கண்­ட­வுடன் முறைப்­பாட்­டா­ளரின் மக­னான 10 ஆண்டில் பயிலும் மாணவன் அந்த இடத்தை விட்டுச் சென்­றுள்ளான்.

பின்னர் பொலிஸார் மகனை அய­லி­லுள்ள வீடொன்றில் இருந்­த­போது அழைத்து வந்து வேறொரு இடத்தில் தங்க வைத்­துள்­ளனர். பொலிஸார் ”ஹீரோ” நாயின் உத­வி­யுடன் தேடுதல் நடத்­தி­ய­போது மூன்று முறை நாய் மக­னிடம் வந்து நின்­றுள்­ளது.

பின்னர் மேற்­கொண்ட விசா­ர­ணையில் மகன் பணத்தை திரு­டி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. மகன் மூன்று கைத்­தொ­லை­பே­சி கள் காலணி மற்றும் உடை ­களை கொள்­வ­னவு செய்­துள்ளான்.

எஞ்­சிய பணத்தை வீட்டுக்கு முன்­னா­லுள்ள பூச்சட்டியின் கீழும் தனது புத்தக அட்டைக்குள்ளும் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சந்­தேக நப­ரான மாண­வனை நேற்று நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

No comments

Powered by Blogger.