Header Ads



சவூதியில் தொழில் விசா, காலம் குறைப்பு

சவூதி அரேபியாவில் தனியார் துறையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசு மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. சவூதி தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் அலி அல் காபி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தேசிய தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று சவூதி நாட்டவரின் வெளிநாட்டு தாய்மார் மற்றும் சவூதி பெண்ணின் சவூதியர் அல்லாத குழந்தைகளுக்கு சவூதி அரேபியர்களுக்கான கட்டுப்பாடுகளுடன் தொழில் புரிய அனுமதிக்க உத்தரவு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.