October 15, 2017

முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் கட்டுக் கதைகள், அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது - விக்டர் ஐவன்

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்களை கிளர்ந்தெழச் செய்யும் காட்டு தர்பாரொன்று அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

இலங்கை சிங்களவர்களில் சிறியதொரு கூட்டத் தினரே அமைப்புக்களை நிறுவி இந்த அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சமூக வலைத் தளங்கள், கூட்டங்களில் உரைகள் மற்றும் வேறு வழிகளிலும் முஸ்லிம்கள் மீது வெறுப்பும் குரோதமும் ஏற்படும் வகையில் விஷமப் பிரசாரங்கள் புரிந்து வருகிறார்கள் பரவலாக அரங்கேற்றப் பட்டு வரும் இந்த நாடகங்கள் அர சாங்கத்துக்குத் தெரியாமலும் இல்லை.

 ஆனால் இதனை அரசு தடுத்து நிறுத் துவதற்குண்டான எத்தகைய முயற்சிக ளையும் எடுப்பதாகவும் தெரியவில்லை இங்குள்ள முற்போக்கு எண்ணம் கொண் டவர்களும்கூட இதனை ஒழித்துக் கட்டுவதற்கு கரிசனை காட்டுவதாகவும் இல்லை.

நான் அண்மையில் சந்தித்த இருவருடன் இது விடயமாக கருத்துப் பரிமாறி யபோது, அவர்கள் அனுபவவாயிலாக வெளியிட்ட கருத்துகள் என்னைத்திடுக் கிடவும் சிந்திக்கவும் வைத்தன.

அதனை இந்த இடத்திலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது காலி பகு தியில் வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றில் இடம்பெற்ற கதைதான் அது.

 மதவாதம் தலைக்கேறாது அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பம் அக்குடும்பப் பிள்ளை கணிதத்துறையில் கற்றுக் கொண்டிருந்தார். அண்மைக்காலமாக அம்மகனின் நடத்தையிலும் புதியதொரு மாற்றத்தை அம்மாணவனது ஆசிரியத் தொழில் புரியும் தந்தையால் அவதானிக்க முடிந்தது.

 அக்குடும்பம் சில சந்தர்ப்பங் களில் இரவு உணவை வீட்டில் சமைக்காது கடையில் வாங்கி உண்ணுவது வழக்கம். அதுவும் காலியில் கலகெ டிய பகுதியிலுள்ள எம்.ஜே. எம். என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் உணவகத்தின் உணவையே எடுத்து சாப்பிட்டு வந்தனர். காரணம் அங்குள்ள உணவுகள் சுத்தமானவை, சுவை கூடியன. அத்துடன் நியாயமான விலையிலேயே விற்கப்படுகின்றன.

இதனால் முஸ்லிம்கள் மாத்திரமின்றி சிங்களவர்களும் அந்த உணவகத்தையே நாடி வந்தனர். வழமைபோல் குறிப்பிட்ட அந்த தந்தை தன் மகனையும் அழைத்துக்கொண்டு அக்கடைக்குச் சென்றார் அப்போது வழமைக்கு மாறாக அந்தக் கடையில் உணவு வாங்க அவ்வாலிபன் மறுத்துவிட்டான்.

அது குறித்து தந்தை வினவியபோது முஸ்லிம் கடைகளில் சிங்களவர்களுக்கு விநியோகிக்கும் உணவு வகைகளில் சிங்கள இனம் பெருகுவதை தடுக்கும் மருந்து கலந்திருப்ப தாக அவன் பதிலளித்தான் அவனைத் திருத்த முயன்றும் தனது நிலைப்பாட்டில் அவன் உறுதியாக நின்றான்.

எனவே அக்கடையில் உணவு வாங்கிய போதும் மகனுக்காக பிறிதொரு கடையில் உணவு வாங்கி கொடுத்துள்ளார். இச்சம்பவத்தை அந்த ஆசிரியத் தந்தை மிகவும் கவலையுடன் தெரிவித்தார் உணவு வகைகளில் மாத்திரமல்ல முஸ்லிம் துணிமணிக்கடைகளிலும் விற்பனை செய்யும் உள்ளாடைகளிலும் கூட மலட்டுத் தன்மைக்கான இரசாயனச் சேர்வைகள் பூசப்பட்டிருப்பதாகவும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் சிங்கள மக்கள் மத்தியில் அமைப்புக்கள் ரீதியாக பரப்பப்பட்டு வருகின்றன.

 இது முஸ்லிம்களின் செல்வாக்கிலுள்ள வர்த்தகத்தை சிங்கள மக்களின் கைகளுக்கு மாற்றச்செய்யும் ஒரு தந்தி ரோபாய சதித்திட்டமேயாகும்.

முஸ்லிம் வர்த்தகர்களிடையே நீதி, நேர்மை காணப்படுகின்றன. முஸ்லிம் கடைகளில் துணிமணிகளை தமக்கு விருப்பமானதாக தேர்ந்தெடுக்கக் கூடிய வறு பலரகங்களிலும் பரவலாக காட்சிப் படுத்தி வைத்திருப்பார்கள். அத்துடன் வாடிக்கையாளருடன் புன்சிரிப்போடு உரையாடுகிறார்கள் ஆடைகளை வேண்டியவாறு பிரித்துப் பார்க்கவோ அணிந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கிறார்கள்.

நியாய விலைகளில் விற்கிறார்கள் இத்தகைய காரணங்களால் யாரும் முஸ்லிம் கடை களையே நாடிச்செல்கிறார்கள். இதனால் அவர்களது வர்த்தகம் ஜே ஜே என்று ஜொலித்துக்கொண்டிருக்கின்றது.

எமது சிங்களக் கடைகளிலோ இதற்கு மாற்ற மாகவே செயற்படுகிறார்கள். இதனால் இக்கடைகள் தூசிபடிந்து தூங்கிக்  கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களது வர்த்தகம் மேலோங்க இதுவே காரணம் இதனால் பொறாமைப்பட்டு பொய் வதந்திகளைப் பரப்பி அவர்களை மட்டம் தட்டப்பார்ப்பது தவறு. அவர்களைப் போல நாமும் முன்னேற எமது பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை மாற் றிக்கொள்ள முயற்சிப்பதே இதற்குரிய சரியான வழியாகும் பரப்பப்படும் கட்டுக்கதைகள் முஸ்லிம் கடைகளில் விற்பனையாகும் உணவு அல்லது உடைகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனச் சேர்வை இருந்ததை யாரும் இதுவரை
ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை.

அத் துடன் முஸ்லிம் கடைகளில் மேற்படி பொருட்களைக் கொள்வனவு செய்துள்ள எந்த சிங்களப் பெண்ணுக்கும் மலட்டுத் தன்மை ஏற்பட்டதாக கண்டறியப்படவும் இல்லை.

குறைந்த பட்சம் முஸ்லிம் உணவகங்களில் எஞ்சும் உணவுகளை உண்ணும் கட்டாக்காலி நாய், பூனைக ளுக்கும் மலட்டுத் தன்மை ஏற்பட்டிருக்க வேண்டுமே அதுவும் இல்லை முகநூல், இணையத்தளங்களில் எல்லாம் முஸ்லிம் வர்த்தகத்துக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுப்போர் இதுவரையும் தம் கூற்றை உறுதிப்ப டுத்தும் வகையில் ஆதாரம் எதனையும் முன்வைக்கவில்லை.
எனவே எதனையும் கண்மூடித்தனமாக பிரசாரம் செய்வது அறிவுடைமை ஆகாது. இதனை யாரும் ஏற்றுக்கொள்ளவோ நம்பவோ கூடாது வர்த்தகத்தில் சிறப்பிடம் பிடிப்பதற்காக உருட்டும் புரட்டும் செய்து ஓர் இனத்தை மற்றோர் இனம் முடக்க நினைக்கக் கூடாது வரலாற்று நெடுகிலும் இப்படி யானதொரு போட்டி பொறாமையைக் கண்டேன்.

 நான் சந்தித்த மற்றொருவர் என்னிடம் கூறிய கூற்றொன்றும் மேற்படி விடயத்துடன் பொருந்துவதாக உள்ளது.

 வர்த்தகத்துறையில் முன்னேறி வரும் ஓர் இனத்தின் மீது மற்றோர் இனம் பொறாமை கொண்டதன் விளைவாக போலி பிரசார உத்திகளைப்பரப்பி வர்த் தகத்தை முடக்கும் சதி முயற்சி குறித்து அலசினோம்.

அதே போன்றே ஒரே இனத்திற்குள்ளும் வர்த்தகப் போட்டி பொறாமை காரணமாக எதிரொலிக்கும் குத்து வெட்டுக்கதையை இப்போது பார்ப்போம் .

என்னை சந்தித்த நபரின் தேயிலை தயாரிப்புக்கு அவுஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் பெரிய சந்தை வாய்ப் பொன்று இருந்தது.

இவ்விருநாடுகளிலும் முதல்தர தேயிலை வர்த்தகராக இவர் புகழ்பெற்றிருந்தார்.

அது மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் இவரது நிறுவன தேயிலை தயாரிப்புகளுக்கு குறிப் பிடத்தக்களவு கேள்விகளும் எழுந்திருந்தன.

இவ்வாறு இவர் வர்த்தகத் துறையில் செல்வாக்கும் பிரசித்தியும் பெற்று வருவது கண்டு இங்குள்ள தேயிலை மட் டுமன்றி வேறு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வரும் மற்றொரு பிரபலம் பெற்றிருந்த வர்த்தகர் ஒருவர் பொறாமை கொண்டார் நல்லதோ கெட்டதோ எந்த வழியை பிரயோகித்தாவது இவரை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டார் .

இரண்டாமவர் முதலாமவருக்கு ஒரு செய்தியை அனுப்பினார் "அவரது தேயிலை வர்த்தகத்தை தனக்கு விற்கும் படியும் அவ்வாறு செய்யத் தவறினால் அவரது தேயிலைப் பொதிகளில் நஞ்சு கலந்து அதனைப் பயன்படுத்தும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள் பலர் மரணிக்க காரணகர்த்தாவாக உங்களைப் பலிக்கடாவாக்கி விடுவேன்." என்று அந்த தகவல் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார் இத்தகவல் கிடைக்கப்பெற்ற முத லாமவர் பெரும் பீதிக்கும் கவலைக்கும் தள்ளப்பட்டார்.

இந்த பொறியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் உபாயத்தை நாடியே அவர் என்னை சந்திக்க வந்தார். அந்த ஆபத்திலிருந்து காப் பாற்றிக்கொள்ள வழி வகுத்துக் கொடுத்தேன் இரண்டாமவரின் நாசகாரம் கைகூடியி ருந்தால் முதலாமவரின் தேயிலை நிறுவனம் மட்டுமல்ல முழு இலங்கை நாட்டினதும் தேயிலை வர்த்தகமும் அதல பாதாளத்தில் விழுந்திருக்கும்.

வர்த்தகப் போட்டி பொறாமையின் விளைவால் ஓரினத்திற்குள்ளும் பாரிய விபரீதங்கள்நி கழ்வதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.

இன-மத-பேதம் காரணமாக எழும் பொறாமையால் இதுபோன்றும் இதனை
விடவும் பயங்கரமான விளைவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

சிங்கள சமூகத்தின் வர்த்தக வீழ்ச்சி குறித்து அவர்களது வர்த்தகத்துறை வரலாறு குறித்து சிங்கள வரலாற்றாய்வாளர்களின் கூற்றுகளையும் பார்ப்போம் வரலாற்றாசிரியர் ரெல்ப் பீரிஸ் குறிப் பிடுகையில்,

சிங்களவர்கள் வர்த்தகத் துறையில் அசட்டை காட்டியே வந்துள்ளனர். அதே போன்றே கைத்தொழில் துறையையும் புறக்கணித்திருந்தனர். சிங்களவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடாததன் விளைவாகவேதான் அநுராதபுரயுகத்திலிருந்து, போர்த்துக்கீசர் காலம் வரையிலும் இலங்கையில் உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரத்தில் முஸ்லிம்களே ஏகபோக உரிமை செலுத்தி வந்தனர்.

அதனால் முஸ்லிம்கள் வர்த்தக சமூகமாகவே கனிக்கப்பட்டனர் அன்று வர்த்தகத்தில் முழு மூச்சாக ஈடுபட்டு வந்த போர்த்துக்கீசரும் அவர் களின் பின்னர் இலங்கையில் கால் பதித்த ஒல்லாந்தரும் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தனர்

இவர்களின் அடக்குமுறைக்கும் கொடு மைகளுக்கும் இலக்கான முஸ்லிம்கள் இலங்கையின் கரையோரங்களிலிருந்து மத்திய பகுதிகளுக்குஇடம்பெயர்ந் தனர். பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போதே மீண்டும் முஸ்லிம்கள் வர்த்த கத்தில் சுதந்திரமாக ஈடுபட வாய்ப்புக்கி டைத்தது.

இந்தக் கால கட்டத்தில்தான் சிங்களவர்களும் வர்த்தகத்தில் முதன்முதலாக தலைகாட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஆயிரம் வருடங்களுக்கு மேற் பட்ட வர்த்தக அனுபவங்கள் கொண்ட முஸ்லிம்கள் வர்த்தகத்துறையில் சிங்களவர்களை விடவும் மிகைத்தும் உன்னத நிலையிலுமே மிளிர்வது ஆச்சரியப்படுவதற்கில்லை.

 மற்றுமொரு வரலாற்றாசிரியையான குமாரி ஜயவர்தனவின் கூற்றின்படி,

"1863 ஆம் ஆண்டில் கொழும்பு நகரின் வர்த்தகம் முஸ்லிம்களின் கைகளிலேதான் இருந்தது.

வெளிநாட்டு, ஐரோப்பியர் அல்லாத வர்த்தகர்களிடையே இந்தியாவிலிருந்து வந்த நாட்டுகோட்டை செட்டி வர்த்தகர்களே சிறந்து விளங்கினர். 1880 ஆம் ஆண்டாகும் போது கொழும்பில் வர்த்தக மேலாதிக்கம் 86 செட்டிமார்களிடமும் 64 முஸ்லிம் வர்த்தகர்களிடமும்தான் இருந்தது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தின் பெரும்பகுதி போரா மேமன், பாரசீக வர்த்தகர்களின் கைகளிலே இருந்தது.

 இந்த சந்தர்ப்பத்திலும் புதிதாக வர்த்தகத்தில் கால்பதித்த சிங்களவர்களிடம் சாராய வர்த்தகமே மேலோங்கியிருந்தது இத்துறையில் மட்டும் இவர்கள் முன்னேற இஸ்லாம் போதைவஸ்தை எதிர்ப்பதால் முஸ்லிம்கள் இந்த வர்த்தகத்தை கைவிட்டதாலேயே சிங்களவர்கள் இதில் தனிக்காட்டுராஜாவானார்கள்.

 அநகாரிக நட்டிய முதலாவது நச்சு விதை

முஸ்லிம்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி வந்த நிலையில் 20 ஆம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில்தான் சிங்களவர்கள் முஸ்லிம்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்தனர் .

இன்று இருப்பது போன்று அன்றும் முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க சிங்களவர்கள் முயற்சியில் இறங்கினர் முஸ்லிம்களின் எழுச்சி பொருளாதாரத்திலும் தங்கியிருப்பதால் வர்த்தகர்கள் மட்டுமன்றி, பெளத்த மறுமலர்ச்சியில் ஈடுபட்டோரும் முஸ்லிம்களின் வர்த்தகத்தை வீழ்த்த தலைப்பட்டனர்.

 இங்குள்ள பௌத்தர்களின் உரிமைகளை வெளியே இருந்து வந்தவர்கள் பறித்தெடுப்பதாக பிரசாரத்தை முடுக்கிவிட்டனர். இத்தகையவர்களுக்கு அநகாரிக தர்ம பால தலைமைதாங்கி செயற்பட்டார் 'பிரித்தானியர்களுக்கு ஜேர்மனி யர்கள் எப்படியோ அதே போன்றே சிங்களவர்களுக்கும் முகம்மதியர் அப் படியே. இவர்கள் மதத்தால், இனத்தால் மொழியால் வேறுபட்டவர்களே என்று இன, மத, மொழி வாதத்தை அநகாரிக தர்மபால அப்போதே சிங்கள பெளத் தர்கள் மத்தியில் விதைத்தார்.

இத்தகைய விஷமக் கருத்துகள் பெளத்தர்களின் உரைகளிலும் சிங்கள பத்திரிகைகளிலும் வேகமாகப் பிரசாரம் செய்யப்பட்டன.

 அப்போது முஸ்லிம்களுக்கெதிராக குரோதமும், இன, மதவாத வெறுப்புணர்வுமே தீவிரமாக வளர்க்கப்பட்டன என்று குமாரி ஜயவர்தன தனது குறிப்பில் சுட்டிக்காட் டியுள்ளார்.

 மேலும் அநகாரிக தர்மபால, "வெளி நாட்டு வெள்ளையன் இந்நாட்டில் பாதம் பதித்தது முதல், சிங்களவர்களின் கைத்தொழில் மற்றும் நடை உடை. பழக்கவழக்கங்கள் யாவும் சின்னாபின் னமாக்கப்பட்டுவிட்டன.

இப்போது சிங்களவர்களுக்கு தமிழர்களதும் சோன கர்களதும் பாதத்தில் விழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்ற இனவாதத் தூண்டுதலையும் முன்வைத்தார்.

 “சிங்கள ஜாதிய" என்ற பத்திரிகையும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருந்தது அதன் ஆசிரியர் பியதாஸ சிறிசேன, சம்மன்காரசோனகர்களுடனும் கொச் சியான் உட்பட வெளிநாட்டு வர்த்தகர்களுடனும் பொருள் வாங்குவதை-விற் பதை சிங்களவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என்று, இன்று அடிப்படைவாதிகள் கூறுவது போன்று அன்றும் கருத்துகள் பரிமாறப்பட்டன .

இவ்விஷக்கருத்துகளின் எதிரொலியாக 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான கலவரம் மூண்டது.நவீன இலங் கையில் முதன்முதலாக இடம்பெற்ற இன வன்செயலாக வரலாற்றில் இது கரும்புள் ளியை ஏற்படுத்தியது.

கலவரங்களின் அழிவு நாசங்கள் இதனால் ஏற்பட்ட நாசகார அழிவுகள்
உடைக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் 88 தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் பள்ளிவாசல்கள் 17,
சூறையா டலுக்கும் இம்சைக்கும் உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்கள் 4075.
கொல்லப்பட்ட முஸ்லிம்கள் 35.
காயத்துக்குள்ளான முஸ்லிம்கள் 189
வன்புணர்வுக்கிலக் கான முஸ்லிம் பெண்கள் 4 இவ்வாறு அழிவுகளைச் சந்தித்து ஒரு நூற்றாண்டு கழிந்த நிலையில் இப்போது மீண்டும் நாடு 1915 க்கு பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?

அல்லது 1983 கறுப்பு ஜூலை நாசகாரத்தை நோக்கி நகர்கிறதா? இத்தகைய நகர்வுகள் மூலம் மேலே கண்ட அழிவுகளை மக்கள் மறந் துவிட்டதாகவே தோன்றுகிறது.

பொறாமை காழ்ப்புணர்ச்சியின் விளைவாகவே 1983 கலவரம் மூண் டது. தமிழ் மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருந்ததில் பொறா மைப்பட்ட சிங்களவர்களின் வெறுப்பு ணர்வின் உச்சக்கட்டத்தில் வெடித்ததே 1983 ஜூலை வன்செயல்களாகும்.1950 ஆண்டிலிருந்தே புகைந்து கொண்டி ருந்த எரிமலை 1983இல் பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

தமிழ் மக்கள் மீதான குரோதம் மிலேச்சர்களால் பல சந் தர்ப்பங்களில் தூவி விதைக்கப்பட்டன ஒரு சந்தர்ப்பத்தில் 1956இல் பண்டார நாயக்க ஆட்சியில் பிரதியமைச்சராகவிருந்த கே.எம்.பி. ராஜரத்ன, "இறுதி தமிழரின் முதுகுத் தோளிலிருந்து செருப்பு ஜோடி ஒன்று தைத்து எனது பாதங்களில் அணியும் வரையில் எனக்குத் தூக்கமே வராது" என்று விஷக்கருத்தைக் கக்கினார்.

பிற்காலத்தில் சிறில்மெத்திவ்வும் தமிழ்விரோதக் குரல் எழுப்பினார் இவ்வாறு தொடர்ந்த இனவாதக் கருத்து களால் உந்தப்பட்ட சிங்களவர்கள் 1983 கலவரத்தின் மூலம் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.

அது 30 வருட யுத்தத்திற்கு வழிகோலி பாரிய உயிர் உடைமைச் சேதங்களுடன் முற்றுப்பெற்றது

1983 ஜூலை வன்செயல்களால் விளைந்த இழப்புகள் இதோ. இதன் பின்னர் தொடர்ந்த போர் அழிவுகளோ பன்மடங்கானவை.

1983இன் விளைவாக
கொல்லப்பட்ட தமிழர்கள்:471

காயங்களுக்குள்ளான தமிழர்கள் 3769
தீவைப்புச் சம்பவங்கள்:8017
சூறையாடப்படட உடைமைகள் 3835
இது இவ்வாறிருக்க தமிழ் மக்கள் இதற்குப் பதிலடி கொடுக்க முனைந் ததால் உருவான சண்டையில் 2009 ஆம் ஆண்டுவரை இரு தரப்பிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.

பில்லியன் கணக்கில் சொத்துடை மைகள் அழிந்து நாசமாயின. இத்தகைய கோர அழிவுகளைக் கண்டும் கேட்டும் எமது மக்கள் இன்னும் பாடம் படிக்க வில்லையென்பதுதான் கவலைப்பட வேண்டியுள்ளது

ஒரு சில அடிப்படை இனவாதிகள் இப்போது எடைபோடுகிறார்கள்; தமிழர்களுக்குக் கொடுத்த அடிபோல முஸ்லிம்களுக்கும் கொடுத்து அவர்களையும் அடிபணியவைக்க வேண்டிய காலம் கனிந்திருப்பதாக நினைக்கிறார்கள். இவர்கள் நினைப்பது போல நடந்தால் நாடு மீண்டும் சுடுகாடாவது தவிர்க்க முடியாது போகும் குழியொன்றில் விழுந்தால் மூளைக்கு இலாபம்" என்று மா ஒசேதுங் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மூளையே இல்லாத ஒருவர் குழியில் வீழ்ந்தால் இலாபம் கிடைக்க மூளை இருக்க வேண்டும். இலங்கை அனுபவித்துக் கொண்டிருப்பது இதனைத்தானே? சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் நிலவும் அரசியல் சித்தாந்தத்தின் சித்து விளையாட்டினாலேதான் இனபேதம் மதபேதம் நாட்டில் தலையெடுத்து, தலைதூக்கிக் கொண்டிருக்கிறது நாம் இலங்கையர் என்ற நல்லிணக்கப் பண்பை நாட்டில் வளர்த்தெடுப்பதில் நாம் இதுவரையும் தோல்வி கண்டே வந்துள்ளோம். இப்போதாவது இதனை உருவாக்கத் தவறுவோமானால் நாடு இப்போதுள்ளதை விடவும் பாரிய சீரழிவுக்குத் தள்ளப்பட்டுவிடும் வன்செயல்கள், மோதல்கள் மூண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் அரசியலமைப்பு மூலம் இதனைச் சீர்செய்ய இயலாது. சிந்தனைப் போராட்டத்தின் மூலம் எழுந்து வரும் மக்களுக்குநிலையான வழியொன்றைத் தோற்றுவித்துக் கொடுப்பதையே அரசியல் யாப்பு மூலம் நிறைவேற்ற நாடு இப்போதும் சரியான பாதையில் பயணிப்பதாகத் தெரியவில்லை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டாண்டுகள் நகர்ந்து விட்டன.

ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவும் இன்னும் முன்வைக்கப்படவில்லை நாடு நோயாளியாகவே காணப்படுகிறது சமூகங்களைப் பீடித்துள்ள நோய்க்குப் பரிகாரம் காணப்பட்டால் நாடு தானாகவே சுகதேகியாகும் அத்துடன் நாட்டின் பரிபாலிப்பும் சீர்திருத்தப்படவேண்டும். எமது மறுமலர்ச்சித்திட்டம் இதனையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது

நன்றி. ராவய (தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்)

2 கருத்துரைகள்:

நடுநிலைமையுடன் சிந்திக்கும் எழுதும் ஒரு மனிதரின் நடுத்த ரமான போக்ைகப்பிரதிபலிக்கும் இந்த கட்டுரை வாசிப்பவர்களைச் சிந்திக்கவும் அதன் படி செயற்படவும் தூண்ட வேண்டும் என நம்புகிறேன்.

Article is a fantastic one. Lets pray to be followed by every citizen of this country.

Post a Comment