Header Ads



இலங்கையில் கற்பழிக்கப்படும், ரோஹின்ய சகோதரிகள்...!


-Haja Sahabdeen-

ஆயிரம்தான் தமிழ் பத்திரிகைகளில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் இனவாத செயல்களைப்பற்றி எழுதிக் குவித்தாலும் அதனால் எந்த பிரயோசனமும் நடக்கப் போவதில்லை. அந்த செய்திகள் இன் நாட்டில் வாழும் பெரும்பான்மை இன முற்போக்குவாத சிந்தனையாளர்களை சென்றடையாது. எனவே சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல நாட்டில் நடக்கும் எல்லா வகையான அனியாயங்களையும் அப்பட்டமாக ஆதாரபூர்வமாக எழுதும் "ராவய" போன்ற பத்திரிகைகளுக்கு எழுதுவதே பயனுள்ளதாக அமையும் என்பது யதார்த்தம்.

அந்த வகையில் அல்லாஹ் எனக்களித்துள்ள நி/மத்துகளைக் கொண்டு அப்படியான சிங்கள செய்திகளை தர முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

08.10.2017 ஆம் திகதிய ''ராவய" பத்திரிகை முஸ்லிம்களுக்கெதிராக அரச அனுசரனையுடனோ, இல்லாமலோ நடக்கும் அனியாயங்களை இம்முறையும் பிரசுரித்துள்ளது. அதில் 13 ஆம் பக்கத்தில் "ரேக்கா நிலுக்ஷி ஹேரத்" கட்டுரையாளல் முழு பக்க கட்டுரையாக வெளிவந்திருக்கும் கடந்த 26.09.2017 ஆம் திகதி கல்கிஸ்ஸவில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ச்சியாக நடந்து வரும் இனவாத செயல்களை விவரிக்கும் போது பின் வரும் தகவலையும் சேர்த்துள்ளார்.

.....................கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் B/2030/17 ஆம் இலக்க வழக்கு மிரிஹான முகாமில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தனொருவன் உள்ளடங்கலான சிலரால் ரோஹிங்யா அகதிகள் குழுவில் இருந்த 20 வயது யுவதி ஒருவரை கற்பழித்தது தொடர்பான குற்றச் சாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது

இந்த குழுவில் இருந்த மேற்படி யுவதி சுகவீனமுற்ற நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தனக்கு நடந்த அவலத்தைப்பற்றி பின்வருமாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.''என்னை வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிவடைந்ததால் போகுமாறு கூறினர். எனக்கு ஒன்றும் விளங்காததால் அங்கிருந்த ஒருவரிடம் தொலைபேசியை வாங்கி நான் இருந்த முகாமின் பொறுப்பாளருக்கு என்னை டிக்கட் வெட்டி இருப்பதாக தெரிவித்தேன். சரியாக 1 மணித்தியாலத்தின் பின்னர் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் மட்டும் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அதனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள் பெண்ணாகிய என்னை அழைத்துச் செல்ல தனியாளாக ஒரு ஆண் பொலிஸ் அதிகாரியை அனுப்பி இருந்தமையையிட்டு. நான் மீண்டும் முகாமிற்கு அழைப்பெடுது அங்கிருந்த ஒரு பெண் உத்தியோகத்தரிடம் இது பற்றி கூறினேன். அந்த பெண் அதிகாரி அந்த உத்தியோகத்தரோடு வரலாம் பிரச்சினை இல்லை என்று. இனி நான் அவருடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினேன்.


ஆனால் அவர் என்னை முகாமிற்கு அழைத்து செல்லவில்லை. ஒரு இடத்தில் நிறுத்தி பானம் ஒன்றை வாங்கித்தர முயற்சித்தார்.ஆனால் நான் அதனை மறுத்தேன். அதன் பின்னர் என்னை ஒரு இடத்திற்கு கொண்டு சென்றார். அது ஒரு ஹோட்டலைப்போன்று இருந்தது. நான் செல்ல மறுத்தேன். ஆனால் என்னை பலாதகாரமாக கொண்டு சென்றார்.ஒரு அறைக்குள் கொண்டு சென்றார் அங்கே இன்னும் இருவர் இருந்தனர்.அவர்கள் எனக்கு அறிமுகமில்லாதவர்கள். அவர்கள் தொலைக்காட்சியில் உதை பந்தாட்ட போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கதைத்துக்கொண்டது ஏதும் எனக்கு விளங்கவில்லை. பின்னர் அறையில் இருந்த இருவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். இந்த பொலிஸ் உத்தியோகத்தர் என் கையைப் பிடித்து ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம் என்று கூறினார். கையைப் பிடித்து இழுத்துச் சென்று அறைக்குள் எடுத்து கதவை தாளிட்டார். அப்போது நேரம் இரவு 8.30 மணியளவில் இருக்கும்...........

(அதன் பின்னர் நடந்தவற்றைப் பற்றி அளித்துள்ள வாக்குமூலத்தை எழுத்தில் வடிக்க முடியாது என்று கட்டுரையாளர் கூறுகிறார். ஆனல் அந்த பெண் நான்கு தடவைகளுக்கும் மேலால் கற்பழிக்கப் பட்டுள்ளாள். மலசலகூடம் செல்ல வேண்டும் என்று கூறிய போதும் தன்னை விடவில்லை என்று கூறியுள்ளார். தனக்கு பியர் போன்ற பானமொன்றை பலாத்காரமாக பருக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து மிருகத்தனமாக கற்பளிக்கப் பட்டுள்ளால் என்று எழுதும் கட்டுரையாளர். இந்த சம்பவத்தின் பின்னர்தான் அவர்கள் அனைவரையும் கல்கிஸ்ஸ வீட்டில் தங்க வைக்கப்பட்டிருத்ததாக கூறுகிறார். 26 ஆம் திகதிய சம்பவத்தின் பின்னர் பூஸா முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டவர்கள் அதை விட மோசமான நிலமைகளுக்கு (அங்குள்ள பூஸா முகாம் அதிகாரிகள் செய்யும் இம்சைகளுக்கு ) முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பட்டுள்ளார்.) யா அல்லாஹ். நீயே போதுமானவன். இந்த பதிவை முடிந்த அளவு பகிருங்கள். செய்தியின் கருப்பொருளுக்காக அல்ல. இதனை வாசிக்கும் சகலரும் குறைந்தது அந்த அப்பாவிகளுக்காக துவா செய்யட்டும் பகிருங்கள்)

குறிப்பு:

இவ்வாறான செய்திகளை உலகுக்கு ( நாட்டு பெரும்பான்மை இன மக்களுக்கு) படம் பிடித்துக் காட்டும் ''ராவய" பத்திரிகைக்கு நாம் செய்ய வேண்டிய கடமைப்பாடொன்றும் உள்ளது. வாசிக்க முடியாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோரும் வெளிவரும் ஒரு பத்திரிகையை 60 ரூபா கொடுத்து வீட்டிலாவது வையுங்கள். அல்லது ஒரு சிங்கள சகோதரருக்கு அன்பளிப்பு செய்யுங்கள்.

4 comments:

  1. Smart move, but think that channel 4 already disclosed the real footage of raping and killing of tamil women in the final stage of the war by some criminal forces.
    Majority of Stilankans would have seen that most disturbing visuals but what is the reaction of the ppl? Nothing
    So try to bring into the next level to get the justice in diplomatic way

    ReplyDelete
  2. If government wants, can give a maximum punishment, not only this case all similar cases. It will be a tough message for the others.

    ReplyDelete
  3. We have authorised our so called leaders by electing them by our votes to voice on behalf of us but those voice of those leaders have no impact as those have been sold and bought by the rulers. Now it is the time for us to look for some genuine leaders from any community. Almighty Allah (SWT) is there to protect us.

    ReplyDelete
  4. It is a heinous crime. This dirty police constable must be prosecuted and sentenced to life. How come the officials who took care of them, can send a male police constable without a female police .... It seems as if an opportunity was purposely created for repeated raping. Our country image is damaged in the face of international arena.

    ReplyDelete

Powered by Blogger.