Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது பொற்காலம், முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பது கடினம்

இந்த கால கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு பொற்காலம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இன்றைய தினம்(25) இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணி என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சி ஒரு அரசாங்கம் என்றிருந்தால் இந்த விடயம் இலகுவாக இருக்கலாம். ஆனால், இந்த கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு பொற்காலமாகும் என கூறியுள்ளார்.


இதேவேளை, கூட்டத்தில், எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிகழ்வில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

4 comments:

  1. நீங்க புழுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்.......

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளது.
    TNA எதிர் கட்சி.

    எப்படி ஆளும் கட்சிகளுக்கு இல்லாத பொற்காலம், ஒரு எதிர் கட்சிக்கு வரும்?

    ReplyDelete
  3. He crying because he couldn't go to Qatar

    ReplyDelete
  4. எங்களுக்கு தெரியும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும் எங்களது உரிமைகளை வென்றடுப்பது கடினம் என்று... இதனை கூறுவதற்கு வெட்கம் இல்லையா? எதனையும் பிடுங்க முடியாது என்றால் ஏன் இன்னும் நாங்கள் தான் முஸ்லிம்களின் தலைவர்கள் என பீத்துகிறீர்கள்... TNA க்கு பொற்காலம் என்றால் அதற்காக அவர்கள் செய்வது சமூக அரசியல்.. உங்களைப் போன்று சொத்து குவிப்பு செய்யும் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் சுயநல அரசியல் இல்லை... இதற்குள் கட்சியை வெல்ல வைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை..

    ReplyDelete

Powered by Blogger.