Header Ads



காவியுடையுடன் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வது..? தலதா எழுப்பியுள்ள கேள்வி

வங்குரோத்து அரசியலுக்காக சிங்கள பௌத்தத்தை மூலதனமாக்கும் சிலர் அதிகாரத்துக்கு வர இடமளிக்க கூடாதென்றும், சில பிக்குகள் காவி உடையணிந்து, பௌத்த தேரர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கீழ்த்தரமான வேலைகளை புரிவது கவலையளிப்பதாகவும்,  அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

இம்புள்ளே பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற பத்துலட்சம் காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன, மத, குல பேதங்களை உருவாக்கி நாட்டைப் பிரிக்க நாம் தயாரில்லை. அன்று 'சில் துணி' வழங்கினார்கள், கிழங்கு கொடுத்தார்கள், பிளாஸ்டிக் நாற்காலிகளை வழங்கினார்கள். இவை அனைத்தையும் வீட்டிற்கே கொண்டு சென்று கொடுத்தார்கள், நாம் தேர்தலை இலக்காக் கொண்டு இங்கு வரவில்லை. நாம் எமது ஆதரவாளர்களுக்கு மாத்திரம் காணி உறுதியை வழங்கவில்லை.

இங்கு கட்சி பேதமில்லை. நாட்டு மக்களை ஏழைகளாகவே வைத்திருந்து தங்களுடைய அரசியல் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என ஒரு சிலர் எண்ணுகின்றனர். கிழங்கு, தேங்காய்களை கொடுத்து குடும்ப ஆட்சியை நிலைப்படுத்த வாக்கு கேட்பவர்கள் நாமில்லை. இந்த ஐந்து வருட காலத்தில் எமது கடமைகளை சரியாகச் செய்வோம்.

தர்மத்தை பாதுகாக்கவே, புத்தர் சங்க பரம்பரையை உருவாக்கினார். எமது தேரர்களுக்கு அவமானம் ஏற்படும் வகையில் காவியுடையணிந்த சிலர் கேவலமாக நடந்து கொள்கின்றனர்.

அகதிகளாக வந்தவர்களை தாக்க முயற்சி செய்து ஆதாயம் தேட முனைகின்றனர். இன்னும் சில நாட்களில் காவியுடையுடன் இவர்கள் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வது?

பிக்கு ஒருவரால் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட போது அரசியல் பேதமின்றி அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் பிரதமராக நாட்டில் பெரும்பணி புரிந்தவர். வங்குரோத்து அரசியலுக்காக சிங்கள பெத்தம் என வேடமிடுவோருக்கு எவரும் ஆதரவு வழங்கக்கூடாது. இன, மத, குல பேதமில்லாது, அனைவரையும் மனிதர்களாக எண்ணுவதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும். 

2 comments:

  1. justice minister doesn't know how to establish the law and order in the country. It's a joke.
    People waiting years and years in northern province get there land mater sorted. Due to same reason she mentioned. It's not happening.

    ReplyDelete
  2. ஜனநாயகத்தின்பேரில் காட்டு தர்பார்! முதலில் சமுகமயமாக்கப்படவேண்டியவர்கள் பா,உ களே!
    இவர்களின் மனதளவில் என்றைக்கு ஒரே நாடு ஒரேமக்கள் யாவரும் சம்ம் என்ற தொணி உருவீகும்வரை!
    ஒரு இனமக்கள் சொந்தக்காணியை இழந்து தவிக்கின்றனர், நீதியமைச்சர் தான்சார்ந்தோருக்கெ பட்டா வழங்குகிறார்! எங்கே போகுது உங்கள் நீது

    ReplyDelete

Powered by Blogger.