Header Ads



விமல், கம்மன்பில நீக்கம்? - மைத்திரி, மஹிந்த சந்திப்புக்கு மீண்டும் முயற்சி..?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ஆகிய இருவரையும், நீக்கிவிடுவதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.  

இதேவேளை, அவ்விரு கட்சிகளையும் சேர்ந்த எம்.பிகளையும் நீக்கிவிடுவதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.   

மேற்படி இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்புகளில்,பங்கேற்பதற்கு, முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அம்முயற்சிகளுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்றும் அறியமுடிகின்றது.   

இ​தேவேளை, அரசமைப்பின் திருத்தம் தொடர்பில், இவ்விரு கட்சிகளும் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு, முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளன என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.   

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.   

இவ்வாறான ​நிலையில், ​தேசிய சுதந்திர முன்னணியும் பிவிதுரு ஹெல உறுமயவும், அதற்கு பங்கமாகவே இருக்கும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.  

இவ்வாறான நிலைமையை கவனத்தில் கொண்டே, இரு கட்சிகளையும் அதன் பிரதிநிதிகளையும் மற்றும் அங்கத்தவர்களையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து நீக்கிவிடுவதற்கு, அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, அந்த தகவல் தெரிவித்தது.    

No comments

Powered by Blogger.