Header Ads



அப்துல் ரகுமான் போல், நாமும் ஆவோமா..?

உலகில் பல வறிய நாடுகளில் அனாதைகளாக சுற்றித் திரிந்த சிறுவர் சிறுமிகளை அழைத்து வந்து இன்று பட்டதாரிகளாக ஆக்கியுள்ளனர். குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற செல்வந்தர் தனது பொருளாதாரத்தை வீடுகளை ஆடம்பரமாக கட்டுவதிலும் புதிய புதிய கார்களை வாங்குவதிலும் செலவழிக்கவில்லை. தனது பொருளாதாரம் முழுவதையும் அனாதைகளை அரவணைப்பதில் திருப்பி விட்டார். சமூக விரோதிகளாக மாறியிருக்க வேண்டிய இந்த மாணவ மாணவிகள் கல்வி கற்று இஸ்லாமிய வாழ்வு முறையை முறையாக பயின்று இன்று பட்டதாரிகளாக வெளியாகின்றனர். அந்த மாணவ மாணவிகள் பட்டதாரிகளாக வெளியாவதைக் கண்ட பார்வையாளர்கள் தங்களையறியாமல் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். அப்துல் ரகுமானைப் போல் ஒவ்வொரு நாட்டிலும் செல்வந்தர்கள் அனாதைகளை அரவணைக்க தொடங்கினால் உலகில் வறுமை ஏது?

-----------------------------------------------------------------------

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்“

என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.

ஷஹீஹ் புகாரி 5304

No comments

Powered by Blogger.