October 30, 2017

விளையாட்டு அரங்கினுள் பார்வையாளர்களாக பெண்கள் - சவுதி அரசு உத்தரவு


-BBC-

`விஷன் 2030` என்ற பெயரின் கீழ், நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டு வருவதற்காக இளவரசர் முகமது அறிவித்த பல சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன.

2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள அரங்கினுள் குடும்பமாக அவர்களால் நுழைய முடியும்.
ஓட்டுநர் தடை நீக்கப்பட்ட பிறகு, சவுதி பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கும் வழியாக இந்த நகர்வு உள்ளது.

சௌதியின் இளவரசரான முகமது பின் சல்மான், பொருளாதாரத்தை உயர்த்தவும், சௌதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் சென்றுகொண்டு இருக்கிறார்.

சௌதி அரேபியாவின் விளையாட்டுத்துறை அதிகாரம், இந்த மூன்று அரங்கங்களிலும், `2018இன் துவக்கம் முதல், குடும்பங்களை அனுமதிக்க தயாராகும் வகையில்` ஆயத்தப்பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது.

உணவகங்கள், தேநீர் விடுதிகள் மற்றும் விளையாட்டை பார்க்க பெரிய திரை உள்ளிட்டவை அரங்கினுள் வைக்கப்பட உள்ளது என அது தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்த அரங்கங்கள் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களாக உள்ளன.

புதன்கிழமை பேசிய இளவரசர் முகமது, `நவீன இஸ்லாமே` தனது நாட்டை நவீனமயமாக்க கடவுச்சாவி என்றார்.

70 சதவிகித சவுதி மக்கள் 30 வயதுகுட்பட்டவர்கள் என்றும், அவர்கள், `தங்களின் மதம், சகிப்புத்தன்மை என குறிப்பிடுதையே வாழ்க்கையாக` வேண்டும் என விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய நாளன்று, ரியாட்டில் உள்ள அரசர் ஃபாட் அரங்கில், நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதற்காக, சமூக வலைதளங்களில், பல பழமைவாதிகள் மூலம், அரசு பின்னடைவை சந்தித்தது.

சமீபத்திய மாற்றங்களையும் தாண்டி, வஹாபிசம் என்ற பெயரில், சுன்னி முஸ்லிம்கள் முறைப்படி, பெண்கள் பல தடைகளை சந்திக்கின்றனர்.

பெண்கள் மிகவும் கடுமையான ஆடைக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். தங்களுக்கு சம்மந்தமில்லாத ஆண்களோடு பழக கூடாது. பயணிக்க, வேலைபார்க்க, உடல் நலத்தை பரிசோதிக்க வேண்டும் என்றால், தங்களுக்கு சம்மந்தப்பட்ட ஒரு ஆணின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் தேவை.

6 கருத்துரைகள்:

முட்டாளே நீயும் உனது முனாபிக்தனமும்......
இஸ்லாம் என்ற பெயரிலே நீங்கள் அடக்கி ஆண்டால் அல்லது அத்துமீறினால் அது பழைய இஸ்லாம். மாறாக உங்களுக்கு ஒரு சலுகை தேவைப்பட்டால் அது புதிய இஸ்லாம்.
உங்களைப்போன்ற நயவஞ்சகர்களை தலைவர்களாக்கி பின்பற்றும் முஸ்லீம் சமூகத்திட்கு என்றுதான் அல்லாஹ்வின் உதவி வருமோ ?

What he is trying do is not modern Islam its already Islam. By the Name of Islam.. many Islamic right was prohibited by Government/Politician of Saudi… (Read the Holy QurAn & Hathees for women beautiful rights) IT has nothing to do with Islam. Islam Was a Beautiful complete Religion. But we worry only about crossing the line with modern sickness…..

இஸ்லாம் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்து உள்ளன என்பதை சவூதி தற்போது அல் குர்ஆன் இல் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றி ஆராய்ந்து தற்போது சிறந்த முடிவு எடுத்து வருவதை உலக முஸ்லிம்கள் சார்பில் வரவேற்கிறோம்

This comment has been removed by the author.

Well Said AHAMAD! those Saudi idiots mean Islam is what they say!

Post a Comment