Header Ads



"இலங்கையை போன்று கடன் பிடிக்குள், சிக்கிவிடுவோமோ என அச்சமாக உள்ளது"

சீனாவிடமிருந்து கடன்களை வாங்கினால், இலங்கையைப் போன்று கடனுக்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்படுமென, பிலிப்பைன்ஸ் உப ஜனாதிபதிகளுள் ஒருவரான லெனி றொப்ரெடோ எச்சரித்தார் என, பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் அறிக்கையிடுகின்றன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் அரசாங்கம், சீனாவிடமிருந்து கடனைப் பெற்று, அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   

அண்மையில், 171 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ (சுமார் 291 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான ரயில் கட்டமைப்பொன்றின் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.   அதைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர்,

“முதலில், இது கடனாகும். மிகப்பெரிய 171 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ அளவிலான கடன். அது, மிகப்பெரியது. இலங்கையால் அனுபவிக்கப்படுவது போல, மிகப்பெரிய கடன் பிடிக்குள் நாம் சிக்கிவிடுவோமோ என்பது தான், எமது அச்சமாக உள்ளது” என்று தெரிவித்தார்.  

சீனாவிடம் கடன் வாங்குவதற்கு தான் முழுமையாக எதிர்ப்பாக இல்லாவிட்டாலும், அபிவிருத்தித் திட்டங்களுக்காக, தொடர்ந்தும் கடனைப் பெறுவதை விட, வேறு வழிகள் குறித்துச் சிந்திக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.    

1 comment:

  1. it's no doubt at all. China is Like
    a blood suckers. if touch it it will take all your blood without your knowledge. wise President is talkin very wisely. pl stop taking loan from China. you'll have give one by one like first your remove your shirt and trouser then all your inner cloth until you become naked. that what we are experiencing in sri lanka.

    ReplyDelete

Powered by Blogger.