Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நிலவரம், ஐ.நா. பிரதிநிதியிடம் நேரில் முறையீடு


(ஏ.ஏ.எம். அன்ஸிர்)

இலங்கை முஸ்லிம்கள் சட்டத்தின் மீதும்இ நீதித்துறை மீதும் நம்பிக்கையிழக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்பிடம் மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நேரில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கும், சிராஸ் நூர்தீன் உள்ளடங்கலான சிவில், சட்ட ஆலோசகர்களுக்கும் இடையிலான முக்கிய  சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை, 19 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற போதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து  புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் நிலவரம், அவர்களுக்காக நஷ்டஈடு இதுவரை வழங்கப்படாமை, மீள்குடியேற்றத்தில் காண்பிக்கப்படும் பாரபட்சம், தர்காடவுன் முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காண்பிக்கப்படும் அநீதி, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதில் காண்பிக்கப்படும் கால தாமதம், கைது செய்யப்பட்டாலும் அவர்கள் அவசர அவசரமாக பிணையில் வெளியே வருகின்றமை, கொழும்பில் ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என நீண்ட விவகாரங்களை ஐ.நா அறிக்கையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் சிராஸ் நூர்தீன்.

மேலும் சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் முஸ்லிம்களை நம்பிக்கையற்றவர்களாக்கி முஸ்லிம் சமூகத்தை வன்முறைக்கு தள்ளிவிடும் சூழ்நிலை உருவாகி வருவதையும் சிராஸ் நூர்தீன் சுட்டிக்காட்டினார்.

இவற்றை கவனமாக செவிமடுத்த ஐ.நா. தூதுவர் பப்லோ டி கிரெய், தற்போதுதான் தாம் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய நிலவரத்தை முழுமையாக அறிந்துகொள்வதாகவும், அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இதுபற்றி தாம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும் இதன்போது வாக்குறுதி வழங்கியுள்ளார்.

9 comments:

  1. முன்னர், மகிந்தவின் பணம்/பதவிகளுக்காக, முஸ்லிம்கள் UN இலங்கையில் தலையிட்டுவதை எதிர்த்து போராடினார்கள்.

    இப்போ, அதே முஸ்லிம்கள் தங்களையும் சேர்த்து தலையிடுமாறு UN யை கெஞ்சுகிறார்கள்.

    எப்புடி, நம்ம கடவுளும் சூழ்ச்சி செய்வாருள்ள.

    ReplyDelete
  2. சகோ. நூர்தீன் அவர்களுக்கு அவருடைய சேவைக்காக அல்லாஹ் அருள்புரிவானாக.

    ReplyDelete
  3. நாட்டுக்குள் ச்கோதர இனத்துடன் சுமுகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை வெளிநாடுகளுக்கு கொண்டுபோய் துரோகம் செய்கிறார்கள் என 2010 இல் முழங்கியவர்கள் இப்பொது ஐநாவாம் !
    அரபு மொழி தெரிந்தவர்களை இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் ஐநாவாம் இப்போது!!
    விட்டால் சியோனிச ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் போவார்கள்!!!

    ReplyDelete
  4. அந்தோனி, விஜய்:
    உங்களுக்கு சிற்றறிவுதான் உள்ளது என்பதை பல சந்தர்ப்பத்தில் நிறுவியுள்ளீர்கள். கடந்த காலத்தில் புலிகள் எமது தாய் நாட்டை அழித்தது மட்டுமன்றி சர்வதேசத்திற்கு கூட்டிக்கொடுத்ததோடு யுத்தத்தை வென்று புலிகளை துடைத்தெறிந்த படைவீரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உன்போன்ற புலியின் எச்சங்கள் முனைந்தபோது தக்கபாடம் புகட்டவே நாங்கள் சர்வதேசத்தை நாடி வெற்றியும் பெற்றோம்.
    இப்போதைய எமது நகர்வு நாட்டையோ சிங்களவர்களையோ காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவுமல்ல. அது உங்களது வேலை. கூட்டுமொத்த சிங்களவர்களில் அதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில காவிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே என்பதை புரிந்துகொள்ளும். புரிவதற்கும் உங்கள் இருவருக்கும் அறிவு இல்லையே.

    ReplyDelete
  5. @Lafir, நீங்கள் சொல்லுவதெல்லாம் பொய்.

    JMயின் மற்றய செய்தியில் றிசாத் அரச பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக UN யில் குற்றம் சொல்லுகின்றார். இதைதான் "கூட இருந்து குழி பறிப்பது" என்பது.

    ஜெனிவா வாக்கெடுப்பில் UN தலையீட்டினை எதிர்த்து 2009 September யில் மட்டுமே, ஒரு தடவை வெற்றி பெற்றது.

    முஸ்லிம்கள் போராட்டம் செய்தது 2010. அதன் பின்னர், 2011, 2013, 2015 ஆகிய மூன்று தடவைகளுக்கும் இலங்கைக்கு ஜெனிவாவில் தோல்வி தான். அதாவது, நீங்களும், முஸலிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு அளிக்க தொடங்கிய பின்னர் இலங்கைக்கு தோல்வி தான் மிச்சம்.

    உங்களுக்கு கிடைத்த ஒரே வெற்றி, ஊர்வலம் சென்ற எல்லாருக்கும் மகிந்த கொடுத்த free சொத்து பாசல்கள் தான்.

    ReplyDelete
    Replies
    1. உலக முஸ்லிம்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்து தமிழர்களின் வரலாற்றோடு ஒப்பீடு செய்கின்றபோது உங்களது வண்டவாளம் கப்பலேறும்.
      தென்னிந்தியாவை சேர சோள பாண்டியன் என்ற வகையில் ஆட்சி செய்து வீரவசனம் பேசுவதைத் தவிர வேறு என்ன வரலாறு உள்ளது?
      ஆனால் முஸ்லிம்களின் வீரம் பக்கம் பக்கமாக எழுதலாம். வெற்றி எங்களுடையது அந்தோனி.

      Delete
  6. Anthony , good good , u r correct even I donot like this comment. Carry on

    ReplyDelete
  7. காட்டிக் கொடுத்தார்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்று கூறும் நீங்கள் ஏன் விடுதலைப்புலிகலால் 1984 மற்றும் 1985 காலப்பகுதியில் சகோதர போராளிகலான PLOT,
    TELO,EPRLF, EPDP போன்ற இயக்கத்தினை ஈன இறக்கமின்றி டயர்கள் போட்டு எரித்தனர்,சுட்டும் கொண்டனர் கொண்டவர்கள் போக மிகுதி போராளிகள் எங்கே சரணடைந்தனர் யாருக்குப் பின்னால் நின்றனர் இதே அரசாங்கத்திற்கு பின்னால்தான்
    நின்றனர் இவர்கலை அரசாங்கம் பயன்படுத்தவில்லையா? இவரக்லையேல்லாம் என்னவென்று சொல்வது? காட்டிக் கொடுத்வர்கள் என்றா? அதேவேலை காட்டிக்கொடுக்க
    விடுதலைப்புலிகளினால் நிர்பந்திக்கப்பட்டவர்கள்.

    அப்பாவி தமிழ் மக்கள் உயிரை விட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரனம் அந்த புலிகளுக்கு
    எதிராக மூவின மக்களும் எதிர்த்தனர்.அதேவேலை முள்ளிவாய்க்கால் மக்கள் இனபடுகொளை செய்து கொள்ளப்பட்டதும் ஏ ற்றுக்கொள்ள முடியாது இத்ற்கும் புலிகளும் பதில் செல்லியே ஆகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @Meera, இன்று தான் கோமாவில் இருந்து எழுப்பினீர்கள் போல.

      30-40 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சொன்ன மாதிரி நடந்ததாம்.

      இப்போ, 2017 அண்ணே. நீங்கள் குறிப்பிட்ட இயக்கங்கள் எல்லாம் தங்கள் தவறுகளை திருத்தி, மன்னித்து, சம்பந்தரின் தலைமையின் TNA யில் இணைந்து விட்டார்கள். இது நடந்தே 10 வருடங்களாகி விட்டதே.

      Delete

Powered by Blogger.