Header Ads



துரத்தியே விட்டனர் 90றில்..!


(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)

-மீலாத் கீரன்-

இரு மணிநேர அவகாசத்தில் -
துரத்தியே விட்டார்கள்
பெட்டி படுக்கையின்றி...
பால்மா, பால்போத்தலின்றி
பாலகர் பசியார ஒருதுண்டுப் 
பாணுமின்றி...
கால்களில் செருப்பு மாட்டக்கூட
கால அவகாசந் தராமல்
அக்கால நகரப் பொறுப்பாளன்
ஆஞ்சநேயர் மேற்பார்வையில்
துப்பாக்கிகளின்  குழாய்முனையில்
குப்பைகளாய், கூளங்களாய்  
யாழ். ஜின்னா மைதானத்தில்
கூட்டிச் சேர்க்கப்பட்ட 
சருகுகளானோம்...
பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு  
களம் பல தந்து -
தடகளப் போட்டிகளாலும் 
தடையறா கால்பந்து போட்டிகளாலும் 
வெற்றிகள் பல கண்ட
விளைநிலமாம் - அம்
மைதானம், எங்களது ஒரேயொரு
பொதுமைதானம் - அன்றுதான் 
அழுதது; சத்தமிட்டு அழுதது! 
அழுத அழுகையில் 
பக்கத்து மையவாடியில்
அடக்கியிருந்த 'மையத்து'க்கள் கூட
அன்று அழுதிருக்கும்...!
அன்றுமுதல் இன்றுவரை நாங்கள்
இன்னும் தூங்கவில்லை - சரியாய்.
இன்றுடன் ஆண்டுகள்
இருபத்தி யேழு.
ஆனாலும் அழவில்லை
இப்போதும் !
பெரும்சவால்களுக்கு மத்தியில்
பெற்றெடுத்த இருநூறு வீடுகளும்கூட
கேள்விக்குறியில் - இன்று ..!
ஆர்ப்பாட்டங்கள் செய்தும்
அசைகின்றன ரில்லர்
அதிகாரிகள் சிலர் -
சில்லறையாகச்
சிலவற்றைத் தந்து
கணக்கினை முடிக்கும்
கணக்குடன்!
இதுதான் இன்றும் நிலைமை!
ஆனாலும் அழவில்லை 
ஒப்பாரி வைத்து வையவுமில்லை!
யாழ்தான் எங்களதும்
தாயக மென்பதால்!

2 comments:

  1. THURA THIYA NAAIKALIN ELUMPAI KOODA PURAKKA NAAIKOODA VARA VILLA
    ANAAL ENAL IRAIVAN ENKU IRUNTHAALUM ENKALUKKU PATHU KAAPPU

    ReplyDelete
  2. May Allah reward you for all your sufferings ..This world is like that..
    All testing and come and go .
    Paradise is a real place of abode .

    ReplyDelete

Powered by Blogger.