Header Ads



ரோஹின்யாவிலிருந்து பாத்திமாவை சுமந்துவந்த 7 வயது ஹூசைன் - புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி


மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். 

ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட யாஷர், தங்கையைத் தன் தோளில் சுமந்துகொண்டான். தங்கையைச் சுமந்தவாரே சகதி நிறைந்த பாதை, வயல்வெளிகள், ஆறுகளைக் கடந்து இரு வாரங்கள் கழித்து வங்கதேசத்துக்கு அக்டோபர் 2-ம் தேதி சிறுவன் வந்தடைந்தான். 

பள்ளிச் சீருடையில் வங்கதேசத்துக்குள் நுழைந்த சிறுவனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் குடும்பத்துக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தனர். தற்போது, வங்கதேசத்தில் உறவினர்களிடம் யாஷர் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். தங்கையைச் சுமந்தவாறு, சகதி நிறைந்த பாதைகளில் யாஷர் நடப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 comment:

  1. இதற்கு பொறுப்பானவர்கள் (மியன்மார் அரச பயங்கரவாதிகளும், முஸ்லிம் ஆட்சி தலைவர்களும்)நிச்சயமாக தண்டிக்கபட வேண்டும். யாஅல்லாஹ் இவர்களின் கஸ்டத்தை இலகு படுத்துவாயாக? ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.