Header Ads



அமெ­ரிக்­காவின் 6 போர்க் கப்பல்கள், இலங்கை வருகின்றன


அமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை  ஆரம்­பித்­துள்­ளன.

சீனா, இந்­தியா, பாகிஸ்தான், தென்­கொ­ரிய போர்க்­கப்­பல்­களும் இலங்கை வர­வுள்­ளன. இலங்கை அர­சாங்கம் ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்ச்­சி­யாக பாது­காப்பு நட்­பு­ற­வினை பலப்­ப­டுத்தி வரும் நிலையில் சர்­வ­தேச நாடு­களின் பாது­காப்பு கூட்டுப் பயிற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

இந்­நி­லையில் அமெ­ரிக்­காவின் ஆறு போர்க்­கப்­பல்கள் இந்த மாத இறு­தியில் இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டை­ய­வுள்­ளன. இம்­மாதம் 28 ஆம் திக­தியில் இருந்து 31 ஆம் திக­திக்குள் இலங்­கையில் கொழும்பு துறை­மு­கத்தை இவை வந்­த­டையும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதில் அமெ­ரிக்க கடற்­ப­டையின் மிகப்­பெ­ரிய விமானம் தாங்கி போர்க்­கப்­பல்­க­ளுடன் இணைந்தே ஏனைய கப்­பல்­களும் இலங்கை நோக்­கிய பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்­ளன. அதேபோல் ஒரு வார காலம் இந்த கப்­பல்கள் இலங்­கையில் தரித்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. 

இந்­நி­லையில் இந்­தி­யாவின் இரண்டு போர்க்­கப்­பல்கள், சீனாவின் ஒரு போர்க்­கப்பல் மற்றும் பாகிஸ்­தா­னிய போர்க்­கப்பல் ஒன்றும், தென்­கொ­ரி­யாவின் பிர­தான இரண்டு போர்க்­கப்­பல்­களும் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதம் முதல் வாரத்­தினுள் இலங்­கைக்கு வர­வுள்­ளது. 

வெவ்­வேறு தினங்களில் வருகைதரவுள்ள நிலையில் இந்த போர்க்கப்பல்களுடனும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுக்க வுள்ளனர்.

1 comment:

  1. அமெரிக்க நலன்களுக்காக cia என்னென்னமோ வித்தைகளை காட்டிவருகிறது. இலங்கை அரசும் இச்சதி வலையில் படிப்படியாக பின்னப்பட்டு வருவதாகவே உள்ளது.
    தன்னலனுக்கு மாற்றமாக சிறுகீறல் விழுந்தாலும் அதனைப்பொறுத்துக்கொள்ளாது பல்டியடிக்கும் என்பதற்கு பாகிஸ்தான் நல்ல உதாரணமாகும்.
    எனவே இவனுக்கு வாலையும் அவனுக்கு தலையையும் காட்டித்தான் ஆட்சியை நகர்த்த வேண்டும். இல்லாவிடில் நாட்டைத்துண்டாக்கி கபளிகரம் செய்துவிடுவான் ட்ரம்ப்.

    ReplyDelete

Powered by Blogger.