Header Ads



68 சதவீத பாலியல் வல்லுறவு சம்பவங்கள், பெண்களின் விருப்பத்துடனே நடக்கின்றன - பொலிஸார் அறிக்கை

பொலிஸாருக்கு கிடைக்கும் பெண் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைய 68 சத வீதமான சம்பவங்கள் பெண்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்கள் என பொலிஸ் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கும் குறைந்த இளம் பெண்கள் தனது விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் இணைந்தாலும் அது பாலியல் வல்லுறவு என கருதப்படுவதே இதற்கு காரணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு பொலிஸாருக்கு 2 ஆயிரத்து 36 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 350 சம்பவங்கள் 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பானது.

கடந்த ஆண்டு 16 வயதுக்கும் குறைந்த ஆயிரத்து 686 இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவற்றில் ஆயிரத்து 394 பேர் சுயவிருப்பத்தின் பேரில் ஆண்களுடன் இணைந்துள்ளனர். 16 வயதுக்கும் குறைந்த இளம் பெண்களில் 292 பேர் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 16 வயதுக்கும் மேற்பட்ட 642 பெண்கள் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் 68 வீதமான பெண்கள் தமது விருப்பத்தின் பேரிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் பொலிஸ் புள்ளிவிபர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.