Header Ads



அமெரிக்காவை கலக்கிய ஸ்ட்டீபன் என்ற 64 வயது கிழட்டு கொலையாளி - 50 பேர் காயம் 400 பேர் காயம்


அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் 50 க்கும் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

மாண்டலே பே சூதாட்ட விடுதியின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டலே பே விடுதியில் நடைபெற்று வந்த ஒரு திறந்த வெளி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் 64 வயதுடைய ஸ்டீஃபன் பேடக் என்றும் உள்ளூரைச் சேர்ந்தவன் என போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்க நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில், இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 200 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஒரு மருத்துவமனை பேச்சாளர் அமெரிக்க ஊடகத்தில் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அது, வீடியோ கேம்களில் ஆடப்படும் விளையாட்டில் தானியங்கி துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றதாக தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஹோட்டல்கள் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தப்பியோடிய மக்கள் அந்தக் கட்டடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

3 comments:

  1. பொதுவாக அப்பாவிகளை கொலை செய்வது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது .அமெரிக்க அரசாங்கம் உலகில் செய்யும் அநீதிகளுக்கு உணர்வை ஏற்படுத்தும் விதமாக இறைவனால் ஏற்பாடாகும் இந்த விடயங்களில் பல படிப்பினைகளை அமெரிக்க அரசும் படையும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்

    ReplyDelete
  2. Alhamdulillah he is not Muslim... So they will now say he has mental problem. But if he was a Muslim... another Muslim land will become like Iraq or Afghan...

    ReplyDelete
  3. புது அறிமுகம் "அமெரிக்கத் தீவிரவாதி"

    ReplyDelete

Powered by Blogger.