Header Ads



தொகுதி எல்லைகளை வரையறுக்க 5 பேர் நியமனம் - ஒரேயொரு முஸ்லிம்

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்கான ஐந்து பேர் கொண்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கே.தவலிங்கம் தலைமையிலான இந்தக் குழுவில், பேராசிரியர் எஸ்.எச். ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர்  சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐந்து பேர் கொண்ட குழுவே, மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்யவுள்ளது.

மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் வரையறுக்கப்பட்ட பின்னரே, மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இந்த முக்கியமான குழுவில் ஹிஸ்புல்லா சேர் சேர்க்கப்பட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கின்றது.

    ReplyDelete
  2. ஜப்னாமுலீம் இனவாதமாக செய்தி வெளியிடுவது வழமை இங்கு 1/5 என்றால் 20% முஸ்லீம் சத்தொகை இலங்கையில் 9% எனவே இது தேவையற்ற செய்தி முஸ்லீம்களிற்கு கூடிய பிரதினிதித்துவமே உள்ளது.மாறாக சிங்களவரே கவலை படவேண்டும்.
    76%சிங்கள.ருக்கு 60%என்பது அவர்களுக்கு அநீதியாகும்.அத்துடன் மலையகதமிழர் இலங்கைதமிழர் எனும் தரப்பினரில் ஒருதரப்பினர் பிரதிநிதித்துவம் இழந்துள்ளனர்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உண்மையில் இது ஒரு தேவையற்ற செய்தி. ..

    ReplyDelete

Powered by Blogger.