Header Ads



ஐரோப்பாவில் காணாமல் போன 4 சவூதி இளவரசர்கள் தற்போது ரியாதில் உள்ளதாக அறிவிப்பு

ஐரோப்பாவில் காணாமல் போன நான்கு சவூதி இளவரசர்கள் தற்போது ரியாதில் இருப்பதாக சவூதி அறேபியாவின் முன்னாள் உளவுத் துறைத் தலைவர், இளவரசர் துருக்கி அல் பைஸல் உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்யப் பத்திரிகையொன்றுக்கு பைஸல் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன நான்கு இளவரசர்கள் குறித்து அவரிடம் வினவப்பட்டபோது, “அவர்களைக் கைதுசெய்வதற்கு இன்டர்போல் பிடியாணை விடுத்தது. இந்த விவகாரங்களை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. இது எமது உள்நாட்டுப் பிரச்சினை. அவர்களை இங்கு சிலர் கொண்டு வந்தனர். தற்போது அவர்கள் அவர்களது குடும்பத்துடன் உள்ளனர்” என்றார்.

கடந்த ஓகஸ்டில் பிபிசி அறபு சேவை வழங்கிய ஆவண நிகழ்ச்சியொன்றில் மூன்று சவூதி இளவரசர்கள், அதாவது தற்போதைய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்தவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று அறிவித்தது. அவர்கள் சவூதி அறேபியாவையும் அதன் ஆட்சியாளர்களையும் எதிர்த்து நின்றவர்கள் எனவும் அறிவித்தது.

தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின்படி ஐரோப்பாவில் காணாமல் போன இளவரசர்கள் கடத்தி வைக்கப்பட்டு, பின்னர் ரியாதுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் அல்லது மாற்றுக் கருத்துள்ளவர்களை கடத்திப் பழிவாங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே இது எனத் தெரிவிக்கப்படுகின்றது. (middleastmonitor)

(மீள்பார்வை)

No comments

Powered by Blogger.