Header Ads



எர்துகானுக்கு எதிரான கொலை முயற்சி - 40 பேருக்கு ஆயுள் தண்டனை

துருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகானை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட  40 பேருக்கு துருக்கி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரு பொலிஸாரைக் கொலை செய்ததாகவும் இவர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டிலும் இவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் 2016 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சியின் போது, ஜனாதிபதி எர்துகானும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் பலாத்காரமாக நுழைந்துள்ளனர். இவர்களினால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இருந்து இரு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 comments:

  1. உலகில் முஸ்லிம் தலைமைத்துவம் இன்னும் இருக்கின்றது என்பதற்கு ஒரேயொரு உதாரணம் துருக்கி நாட்டின் தலைவர் எர்துகான் அவர்கள் மட்டும்தான். அன்னாரை அல்லாஹ் அவனுடைய அருள்,கிருபை கடாட்சம் மூலமாக சகல துன்பங்கள், தொல்லைகள்,நவவஞ்சகர்கள்,காபிர்களின் சூழ்ச்சிகளில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என இருகரமேந்திப் பிரார்த்தனை செய்கின்றேன்.

    ReplyDelete
  2. தலயை வெட்டிட்டா முடிஞ்சுது.. சும்மா வச்சு சாப்பாடுபோடாம...

    ReplyDelete
  3. I love Edorgan for his effort in Ruling. But to say it is the remaining kilaphat.. really funny... visit Turkey to see the status of Islam among the public ...alcohol bars. Night clubs.. cinema theotors.. lovers park.. still struggle for wearing hijab.. many more... under this condition considering kilaphat is joking. Kilaphat without practicing Islam? Yes it can be but Un Islamic kilaphat as cried by groups who even do not keep Sunni on their face but remove the sunnah or trim it as per their desiers.
    May Allah give us the effort to establish Islamic Kilaphate and not just Kilaphate.

    ReplyDelete

Powered by Blogger.