Header Ads



இலங்கை அணியை மீட்டெடுக்க, களமிறங்கியுள்ள 3 தலைகள்


தற்­போது கடும் பின்­ன­டைவை சந்­தித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியை மீட்­டெ­டுக்க இலங்கைக் கிரிக்­கெட்டின் பெரும் தலை­க­ளான அர­விந்த டி சில்வா, குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருடன் களத்தில் இறங்­கி­யுள்­ளனர்.

தொடர்ச்­சி­யாக தோல்­வி­களை சந்­தித்து பின்­ன­டைவை எதிர்­நோக்கி வரு­கின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில்  விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் கிரிக்கெட் ஆலோ­சனை செயற்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலை­வ­ரான ஹேமக விஜே­சூ­ரி­யவின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட இக்­கு­ழுவில் முன்னாள் வீரர்­க­ளான அநுர தென்­னகோன், அர­விந்த டி சில்வா, குமார் சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன மற்றும் விளை­யாட்டு வைத்­

திய நிறு­வ­கத்தின் நிறை­வேற் றுப் பணிப்­பாளர் வைத்­திய அத்­தி­யட்­சகர் எதி­ரி­சிங்க உள்­ளிட்ட 5 பேர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில், கடந்த மாதம் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் இலங்கை கிரிக்கெட் நிறு­வன அதி­கா­ரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்­று­விப்­பா­ளர்கள் மற்றும் விளை­யாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் நடத்­தப்­பட்ட விசேட செய­ல­மர்வில் முன்­மொ­ழி­யப்­பட்ட தீர்­மா­னங்களை உள்­ள­டக்­கிய திட்­டங்­களை ஆராயும் முக­மாக நடை­பெற்ற முத­லா­வது சந்­திப்பு விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்­றது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தலை­மையில் நடை­பெற்ற இச்­சந்­திப்பில் இலங்கை அணியின் முன்னாள் தலை­வர்­க­ளான அர­விந்த டி சில்வா, குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன உள்­ளிட்ட ஐவ­ர­டங்­கிய கிரிக்கெட் செயற்­குழு உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டனர்.

சுமார் 2 மணித்­தி­யா­லங்கள் நடை­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில், இலங்கை கிரிக்­கெட்டில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான முன்­மொ­ழி­வுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. 

அத்­துடன், விரைவில் அவற்றை நடை முறைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­றிட்­டங்­களை வகுத்து ஆரம்ப கட்ட இடைக்­கால அறிக்­கை­யொன்றை கைய­ளிக்­கு­மாறு கிரிக்கெட் ஆலோ­சனைக் குழு­விடம் அமைச்சர் கேட்­டுக்­கொண்டார்.

இதன்­படி, குறித்த விசேட குழு­வினால் எதிர்­வரும் 3 மாதங்களில் கிரிக்­கெட்டை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான இடைக்­கால அறிக்கை சமர்­ பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன், இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் இதற்­கான அனைத்து ஒத்­து­ழைப்­பு­களும் வழங்­கப்­படும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் இதன்­போது உறு­தி­ய­ளித்­துள்ளார்.    

இந்த சந்­திப்பின் பின் கருத்து தெரி­வித்த குமார் சங்­கக்­கார தற்­கா­லிக தீர்­மா­னங்­களால் கிரிக்கெட் வளர்ச்சி அடை­யாது என்றும் தூரநோக்கு சிந்­த­னை­யுடன் செயற்­பட வேண்டும் என்றார்.

இதன்­போது மஹேல ஜய­வர்­தன கூறு­கையில், நான் ஏற்­க­னவே தயா­ரித்துக் கொடுத்த திட்­டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அழைத்திருக்கிறார். இந்த முறை நாம் கொடுக்கும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தா விட்டால் இலங்கைக் கிரிக்கெட்டுக்காக நான் வரும் கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்றார்.

அத்தோடு இனி யாரும் என்னை அழைக்க வேண்டாம் எனவும் அவர் கறாராக தெரிவித்தார்.

இது ஆலோசனைக் குழு மட்டுமே. கிரிக்கெட் அணியைக் கட்டுப்படுத்தாது. அத்தோடு இதற்கும் கிரிக்கெட் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சருக்கே அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.