Header Ads



இலங்கை அணியிடம், கேட்க வேண்டிய 3 கேள்விகள்


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

2010-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்சில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்த பாகிஸ்தான் அணியை, முதல் முதலில் வீழ்த்திய அணி இலங்கை தான் என்ற பெருமையை பெற்றது.

இப்படி பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்த இலங்கை அணி, இந்தியாவிடம் தொடர் தோல்விகளை சந்தித்து கடும் விமர்சனத்திற்குள்ளானது.

அப்படி இருக்கையில் இலங்கை அணியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியது உள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், முதல் கேள்வியாக, இலங்கை அணிக்கான டெஸ்ட் அணியில் துவக்க வீரராக உள்ள குசால் சில்வாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் வேண்டும் என்ற அளவிற்கு வாய்ப்புகள் தரப்பட்டுவிட்டது. ஆனால் அவர் அந்த அளவிற்கு அதிமான ஓட்டங்கள் எடுக்கவில்லை. தற்போது பாகிஸ்தான் தொடரிலும் கூட மொத்தமாக அவர் 67 ஓட்டங்கள் தான் எடுத்தார்.


அதே போன்று இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமல் மற்றும் திரோசன் டிக்வெல்லா ஆகியோர் இருந்தால் தான், இலங்கை அணி ஒரு வலுவான ஓட்டங்களை குவித்துவிடுகிறது. இவர்களில் யாரேனும் ஒரு தொடரில் சராசரியாக 65 ஓட்டங்கள் எடுத்துவிடுகின்றனர்.

இந்த மூவரும் ஒரு தொடரில் சிறப்பாக ஜொலிக்க தவறினால் இலங்கை அணி ஆட்டம் கண்டு விடுகிறது. தற்போது நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தொடரில் இந்த மூவரின் சிறப்பான ஆட்டத்தால் தான் பாகிஸ்தான் அணி 400 ஓட்டங்களை கடந்தது.

மூன்றாவது லகிரு திருமனேவுக்கு இலங்கை அணியில் வாய்ப்புகள் கொடுக்கலாம், இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது சிறப்பான ஆட்டங்களை அவர் கொடுத்தார்.

அவருக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்படாததால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரைப் போன்று சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து தான் பார்க்கலாமே?

1 comment:

  1. We will discuss this issue with Jaffna Muslim and take immediate action.

    ReplyDelete

Powered by Blogger.