Header Ads



எனது பாட்டனாருக்கு 30 ஆயிரம் ஏக்கர் இருந்தது, தற்போது 400 மில்லியன் எனது வங்கி கணக்கில் உள்ளது

மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான அனுரகுமார திஸாநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய நடத்தப்பட்ட விவாதம் இன்று -19- நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய அதிவேக நெடுஞ்சாலை கண்டிக்கு மாத்திரமல்லாது குருணாகல், கேகாலை உட்பட பல நகரங்கள் வழியாக செல்கிறது. இதனால், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அனுரகுமார திஸாநாயக்க, வீதி அந்த நகரங்களுக்கு மாத்திரமல்ல அமைச்சரின் வீட்டை நோக்கியும் செல்கிறது அதாவது இதன்மூலமான பயனை அமைச்சரும் அனுபவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், எமக்கு மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்து காணிகள் இருக்கின்றன. எனது மனைவியின் பாட்டனாருக்கு பலாங்கொடையில் 30 ஆயிரம் ஏக்கர் இருந்தது.

நாங்கள் சட்டத்தரணியாக நீதிமன்றம் சென்ற காலத்தில் வருடத்திற்கு 25 இலட்சம் ரூபா வரை சம்பாதித்துள்ளோம்.

தற்போது கூட வரி செலுத்தப்பட்டு 400 மில்லியன் ரூபா எனது வங்கி கணக்கில் உள்ளது. இதனால், எமக்கு கொள்ளையடிக்கும் தேவையில்லை. நாங்கள் எதுவும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல எனக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.