Header Ads



சவூதியிலிருந்து 2 கோடி தங்க, ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது


(ரெ.கிறிஷ்­ணகாந்)

சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இரண்­டரை கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­மதி கொண்ட தங்க ஆப­ர­ணங்­களை கடத்­தி­வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணிக்­குழு உறுப்­பினர் ஒருவர் (Cabin Crew Member) கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நேற்றுக் காலை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று அதி­காலை 4 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டைந்த யூ.எல். 282 என்ற ஸ்ரீலங்கன் விமா­னத்தின் ஊடாக வந்த சந்­தேக நப­ரான 50 வய­து­டைய பணிக்­குழு உறுப்­பினர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இச்சந்­தேக நபரை விமான நிலை­யத்தின் வெளி­யேறும் நுழை­வா­யிலில் வைத்து சுங்­கத்­தினர் சோத­னைக்கு உட்­ப­டுத்­திய போது அந்­நபர் தனது கால­ணிகள் மற்றும் இடுப்புப் பட்­டியில் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் மறைத்து வைத்­தி­ருந்த 5. 3 கிலோ­ கிராம் தங்க ஆப­ர­ணங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக சுங்க ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

கைப்­பற்­றப்­பட்ட மொத்த தங்க ஆப­ர­ணங்­களின் பெறு­மதி 2 கோடியே 60 இலட்சம் என அவர் மேலும் தெரி­வித்தார்.

விமான நிலைய சுங்­கத்­தி­னரால் நீண்­ட­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­ வந்த விசா­ர­ணைகளுக்­க­மைய இந்த விமான பணிக்­குழு உறுப்­பினர் கைது செய்­யப்­பட்­ட­தாக சுங்க ஊடகப் பேச்­சாளர் சுனில் ஜய­ரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விமான நிலைய சுங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.