Header Ads



அடுத்த வரவுசெலவுத் திட்ட, செலவினத்தில் முதலிடத்தைப் பிடிக்கவுள்ள அமைச்சு - 290.71 பில்லியன் ஒதுக்கீடு

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.

போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் பாதுகாப்புச் செலவினம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய பாதுகாப்பு அமைச்சுக்கு 290.71 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இதில், 260,711,375,000 ரூபா மீண்டெழும் செலவினமாகவும், 30 பில்லியன் ரூபா மூலதனச் செலவினமாகவும் இருக்கும்.

அதனையடுத்து, நிதியமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கான மீண்டெழும் செலவினங்களுக்கு 196,517,853,000  ரூபாவும், மூலதனச் செலவினமாக  37,054,235,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு-  மீண்டெழும் செலவினம் -134,399,998,000 ரூபா, மூலதனச் செலவினம்,  44 பில்லியன் ரூபா.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு- மீண்டெழும் செலவினம் 118,176,198,000 ரூபா, மூலதனச் செலவினம், 14,867,350,000 ரூபா.

வெளிவிவகார அமைச்சு – மீண்டெழும் செலவினம் 9,956,950,000 ரூபா, மூலதனச் செலவினம்14,867,350,000 ரூபா.

உயர்கல்வி அமைச்சு- மீண்டெழும் செலவினம் 32,757,000,000 ரூபா,  மூலதனச் செலவினம் 150 பில்லியன் ரூபா.

சிறிலங்கா அதிபர் பணியகம் – 487, 352,500 ரூபா,

பிரதமர் பணியகம் – 177,268,000 ரூபா

No comments

Powered by Blogger.